1. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் தொடர்ந்து மழை  பெய்து வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்களான மோயர் சதுக்கம், பைன் மர சோலை,பில்லர் ராக், குணா குகை,மன்னவனூர் சூழல் சுற்றுலா உள்ளிட்ட சுற்றுலா தலங்கள்  ஒரு நாள் மட்டும் சுற்றுலா பயணிகளின் பார்வைக்கு தடை-வனத்துறை அறிவிக்கப்பட்டுள்ளது.


2.திருநெல்வேலி மாவட்டம், முழுவதும்  தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது  எனவே  பொதுமக்கள் தாமிரபரணி நதியில் சென்று  குளிக்க தடை விதிக்க பட்டுள்ளது, என்றும்  நீர் நிலைகளின் அருகில் சென்று செல்ஃபி எடுக்க வேண்டாம் என்றும்  கரையோர பகுதிகளுக்கும் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான பகுதிக்குச் செல்ல வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு இ.ஆ.ப.,  தெரிவித்துள்ளார்கள் .


3. உ.பி., பஞ்சாபில் தேர்தல் நடக்க உள்ளதால் தான் மத்திய அரசு வேளாண் சட்டங்களை ரத்து செய்தது என சிவகங்கையில் கார்த்தி சிதம்பரம் எம்.பி., தெரிவித்தார்.


4. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அரசு மருத்துவமனை நர்ஸ் செல்வி தாஸ் 40,வீட்டில் கொலை செய்யப்பட்டார். இது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றது.


5. தேனி மாவட்டம் போடியில் மனைவியை சந்தேகப்பட்டு  அரிவாளால் வெட்டி  கொலை' செய்த தென்றல்நகர் ஜவுளிவியாபாரி வீரக்குமாருக்கு 38, தேனி மகளிர் நீதிமன்றம் ஆயுள்  தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.



6. மதுரை, தேனி, தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


7. மதுரை மாவட்டத்தில் 2012-21 வரை 102 போக்சோ வழக்குகளில் 31பேருக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது எனவும், மாவட்ட வளர்ச்சி கண்காணிப்பு குழு கூட்டத்தில் முதன்முறையாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



8. ராமநாதபுரம் மாவட்டம்,  தெற்கு ஆண்டாவூரணி கிராமத்தைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். கொலை வழக்கில்  சிறையில் தண்டனையை அனுபவித்து வந்துள்ளார். ஜாமீனில் வெளியே வந்த இவர் மனைவியை கொலை செய்ய முயற்சித்துள்ளார். இதனால் மீண்டும் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.


9.தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகளவு கனமழை பெய்ததால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.



10.சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் வழங்கப்படும் நலத்திட்டங்களை பெறுவது குறித்து தன்னார்வலர்கள் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை -  சிறுபான்மையினர் நலத்துறை இயக்குநர் சுரேஷ் தகவல்.


 


இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Sivaganga | ஆண்கள் காது வளர்க்கணும்... ஏன்னா வரலாறு அப்படி.! சிவகங்கை செகுட்டை அய்யனாரும் நம்பிக்கையும்!