கொரோனா தொற்று காலத்தில் ரயில் நிலையங்களில்சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவும் அதிக கூட்டம் சேருவதை தவிர்க்கவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அதன் ஒரு பகுதியாக மதுரை கோட்டத்தில் மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி ஆகிய ரயில் நிலையங்களில் நடைமேடை சீட்டு கட்டணம் ரூபாய் 10 லிருந்து ரூபாய் 50 ஆக உயர்த்தப்பட்டது.
தற்போது கொரோனா தொற்று குறைந்து வருவதால் மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி ஆகிய இடங்களில் நடைமேடை சீட்டு கட்டணம் ரூபாய் 10 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் ரயில் பயணிகள் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளான கை கழுவுதல், முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் ஆகியவற்றை கடைப்பிடிக்கும்படி ரயில்வே நிர்வாகம் சார்பாக கேட்டுக் கொள்ளப் படுகிறது
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - ஒருவர் கை பக்குவத்தில் ஊரே சமைக்கும் எண்ணெய் சுக்கா! இது தான் மதுரையோடு பக்கா!
இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன்...,’ கோவிட் காலத்தில் ரயில்வே நடைமேடை கட்டணம் 50 ரூபாயாக உயர்த்தப்பட்டது. மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர வேண்டும் என ஒன்றிய அமைச்சரிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தேன். அதன்படி மீண்டும் நடைமேடை கட்டணம் 10 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளதை வரவேற்கிறேன். அதற்கென தனி கவுண்டர் துவக்கப்பட வேண்டும்” என மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் டிவிட்டர் வாயிலாக கோரிக்கை விடுத்துள்ளார்.
”மதுரை கோட்டத்தில் பிளாட்பாரம் டிக்கெட் கட்டணம் குறைப்பு” ரயில்நிர்வாகத்தின் அறிவிப்பு இன்று இரவு முதல் அமலுக்கு வருகிறது என்பது குறிப்பிடதக்கது. இதனை ரயில் பயணிகள் பலரும் வரவேற்றுள்ளனர்.
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Sivaganga | ஆண்கள் காது வளர்க்கணும்... ஏன்னா வரலாறு அப்படி.! சிவகங்கை செகுட்டை அய்யனாரும் நம்பிக்கையும்!