தமிழகத்தில் சொத்துவரி உயர்வு, விலைவாசி, பால் விலை உயர்வு, மின்கட்டண உயர்வு ஆகியவற்றை தி.மு.க., அரசு உயர்த்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை பரவை பகுதியில் செல்லூர் கே.ராஜூ தலைமையில் அ.தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து செல்லூர் ராஜூ பேசியதாவது: குஜராத்தை பொறுத்தவரை அமித்ஷா, பிரதமர் மோடி உள்ள சொந்த ஊர் எனவே அவர்களுக்கு அப்பகுதி மக்கள் வாக்களித்துள்ளனர். காசியில் தமிழ் பற்றி பேசியதால் அப்பகுதி தமிழர்கள் அவர்களுக்கு வாக்களித்துள்ளனர். எனினும் கூட்டணி அமைவதை பொறுத்தவரைதான் பாஜக வெற்றி பெறும்.
தமிழகத்தில் பா.ஜ.க., வளர்ந்து வருகிற கட்சி அ.தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்தால் மட்டுமே தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெறும். அது பா.ஜ.க., கையில்தான் உள்ளது. தேர்தல் நேரத்தில்தான் கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும். கோவை செல்வராஜ் ஏற்கனவே காங்கிரசில் இருந்தார். இப்போது தி.மு.க.,வில் சேர்ந்துள்ளார். அவர் அடிக்கடி கட்சிமாறுவார் அது அவரது விருப்பம். அ.தி.மு.க.,விலிருந்து கட்சி மாறியவர்கள் கூட தி.மு.கவில் தற்போது அமைச்சர்களாக உள்ளனர். கட்சி மாறியவர்கள் குறித்து பேச விரும்பவில்லை.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - மதுரை மத்திய சிறையில் ரூ.100 கோடி ஊழல் புகார்: 12 அலுவலர்களை வேறு சிறைக்கு மாற்றிய டிஜிபி