கண்ணன் வாயை திறந்த போது உலகமே தெரிவது போல செந்தில் பாலாஜி வாயை திறந்தால் யார் யார் உள்ளே போக போகிறார்கள் என தெரியவில்லை என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.


மதுரையில் ஆகஸ்ட் 20ம் தேதி நடைபெறவுள்ள அ.தி.மு.க., மாநாட்டு அழைப்பிதழை அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ அ.தி.மு.க.,வினருடன் இணைந்து மீனாட்சியம்மன் கோவிலில் வைத்து வழிபாடு நடத்தினார். இதனைத் தொடர்ந்து இஸ்லாமியர்களின் புனித தளமான கோரிப்பாளையம் தர்கா, கிறிஸ்தவர்களின் புனித தளமான சென் மேரீஸ் தேவாலயம் ஆகிய வழிபாட்டு தளங்களிலும் அழைப்பிதழை வைத்து வழிபாடு நடத்தினார்.


- காவிரி விவகாரத்தில் வரலாறு தெரியாமல் பேசுவதாக கூறிய அமைச்சர் துரைமுருகனுக்கு ஓபிஎஸ் கடும் கண்டனம்




பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, "மதுரையில் ஆகஸ்ட் 20 அ.தி.மு.க.,வின் பொன்விழா மாநாடு அரசியல் மாநாடாக நடைபெறுகிறது. மதுரையில் நடைபெறும் அ.தி.மு.க., மாநாடு தமிழகத்தில் மாற்றத்தை கொண்டு வரும், மதுரை மக்கள் மாநாட்டில் பங்கேற்க வீடு வீடாக சென்று அழைப்பிதழ் கொடுக்க உள்ளோம். அதிமுக மாநாட்டுக்கு பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது, மாநாட்டுக்கு வரும் அதிமுக தொண்டர்களுக்கு உணவு தயாரிக்க 10,000 சமையல் கலைஞர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.




- இனிப்பான செய்தி.. குறைந்தது தக்காளி விலை.. இவ்வளவுதானா..? பழனியில் குவிந்த மக்கள்..!


3 இடங்களில் 300 கவுண்டர்கள் அமைத்து உணவு வழங்கப்படுகின்றது, இசையமைப்பாளர் தேவா கச்சேரி, மதுரை முத்து, ராஜலெட்சுமி - கணேஷ் ஆகியோர் நிகழ்ச்சிகள் உள்ளன, செந்தில் பாலாஜியால் அனைத்து அமைச்சர்களுக்கும் தூக்கம் இல்லாமல் பதற்றதுடன் தவித்து வருகிறார்கள், வெண்ணெய் தின்ற கண்ணன் வாயை திறந்த போது உலகமே தெரிவது போல செந்தில் பாலாஜி வாயை திறந்தால் யார் யார் உள்ளே போக போகிறார்கள் என தெரியவில்லை. அண்ணாமலை கருத்து குறித்து எனக்கு எந்தவொரு கவலையுமில்லை, குதிரைக்கு கடிவாளம் போட்டது போல நாங்கள் மாநாட்டு பணிகளில் ஈடுபட்டு உள்ளோம், ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் 10 ஆம் தேதி ரிலீஸ், அதிமுக மாநாட்டின் மெயின் பிக்சர் 20 ஆம் தேதி நடைபெறுகிறது, தென் தமிழகத்தில் பிரசித்திபெற்ற சித்திரை திருவிழா போல அதிமுக மாநாடு நடத்தப்படும்" என கூறினார்.


- "இந்தித் திணிப்பு எதிர்ப்பு; கலைஞர் கருணாநிதி நீட்டி பிடித்த நெருப்பு," வைரமுத்துவின் புகழஞ்சலி வைரல்!





ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.