சென்னையில் நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சியில் பங்கேற்க விண்ணப்பிப்பது எப்படி?

சிறப்பான நிகழ்ச்சி வழங்கிய கலைக்குழுவினர் மாநில அளவிலான தேர்வுக்குழுவால் தேர்வு செய்யப்பட்டு 2026-ஆம் ஆண்டு சென்னை சங்கமம் விழாவில் வாய்ப்பு பெறுவார்கள்.

Continues below advertisement

தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறை சார்பில் தமிழ்நாட்டின் நாட்டுப்புறக் கலைகள், அயல் மாநில நாட்டுப்புறக் கலைகள், செவ்வியல் கலைகள் இடம் பெறும் வகையில் “சென்னை- நம்ம ஊரு திருவிழா” 18 இடங்களில் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு கோயம்புத்தூர், தஞ்சாவூர், வேலூர், சேலம், திருநெல்வேலி, காஞ்சிபுரம், மதுரை மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகிய 8 இடங்களில் நம்ம ஊரு திருவிழா நடத்தப்பட்டது.

Continues below advertisement

Trump Vs Iran: டீலுக்கு ஒத்துக்கோ.. இல்லன்னா வேற மாதிரி ஆயிடும்.. ஈரானை எச்சரித்த ட்ரம்ப்...


இவ்வாண்டும் மேற்கண்ட 8 இடங்களிலும் இக்கலை திருவிழா நடத்தப்பட உள்ளது. இவ்விழாவில் நிகழ்ச்சி நடத்த விரும்பும் கலைக்குழுக்கள் மார்ச் 22 மற்றும் 23 ஆகிய நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை தேனி மாவட்டத்தில் கோட்டூர், அரசு கலைக் கல்லூரியில்  நிகழ்ச்சி  பதிவுகள் மேற்கொள்ளப்பட உள்ளது. அதனடிப்படையில், நையாண்டி மேளம், கரகாட்டம், காவடியாட்டம், புரவியாட்டம். காளை ஆட்டம், மயிலாட்டம், பறையாட்டம், பம்பை கைச்சிலம்பாட்டம், இறை நடனம், துடும்பாட்டம், ஜிக்காட்டம், கிராமிய பாட்டு மற்றும் பல்சுவை நிகழ்ச்சி வழங்கும் கலைக்குழுக்கள் 22.03.2025 சனிக்கிழமை  அன்றும்,

எம்.எல்.ஏ வேல்முருகன் மீது நடவடிக்கை எடுக்கச் சொன்ன முதல்வர் ஸ்டாலின்.! டென்சனான சபாநாயகர்...

தெருக்கூத்து, இசை நாடகம், நாடகம், கனியான் கூத்து, பொம்மலாட்டம். தோல்பாவைக் கூத்து. வில்லுப்பாட்டு, தேவராட்டம், ஒயிலாட்டம். சிலம்பாட்டம், மல்லர் கம்பம், கும்மி, கோலாட்டம், மரக்கால் ஆட்டம், பரதநாட்டியம், பழங்குடியினர் நடனம் நிகழ்ச்சி நடத்துவோர் மற்றும் இதர கலைக்குழுக்களின் நிகழ்ச்சிகள்  23.03.2025    ஞாயிறு அன்றும் பதிவுகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

கலைஞர்களின் கோரிக்கையின் அடிப்படையில் 38 மாவட்டங்களிலும் கலைக்குழுக்களின் நிகழ்ச்சி பதிவு செய்யப்பட உள்ளது. இப்பதிவுக்கு வரும் கலைஞர்களுக்கு மதிப்பூதியம் போக்குவரத்து செலவினங்கள் வழங்கப்படாது. ஒவ்வொரு கலைக்குழுவின் 5 நிமிட வீடியோ பதிவு செய்யப்பட்டு,  பண்பாட்டுத் துறையால் அமைக்கப்படும் தேர்வுக் குழுவால் தமிழ்நாட்டில் 8 இடங்களில் நடைபெற உள்ள சங்கமம் திருவிழாவில், நிகழ்ச்சி வழங்குவற்கான கலைக்குழுக்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.


இவ்விழாக்களில் சிறப்பான நிகழ்ச்சி வழங்கிய கலைக்குழுவினர் மாநில அளவிலான தேர்வுக்குழுவால் தேர்வு செய்யப்பட்டு 2026-ஆம் ஆண்டு சென்னை சங்கமம் விழாவில் வாய்ப்பு பெறுவார்கள். மாவட்ட அளவிலானத் தேர்வில் பங்கு பெற விரும்பும் கலைக் குழுக்கள் கலை பண்பாட்டுத் துறையின் இணையதளத்தில் (www.artandculture.tn.gov.in) வெளியிடப்பட்டுள்ள கூகுள் பார்ம் (Google Form) மூலம் 20.03.2025 அன்று மாலைக்குள் விண்ணப்பிக்கலாம்.

Stalin Vs EPS: ஓடாதீர்கள்.!! நான் பேசுவதை கேட்டுவிட்டு செல்லுங்கள்.. ஆவேசமான இபிஎஸ்-ஐ அழைத்த ஸ்டாலின்...

மேலும், தகவல்களுக்கு தேனி மாவட்டத்திற்கான பொறுப்பாளராக தனுஷ்கோடி என்பவரின் 9487537669 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பதிவு செய்துக்கொள்ளலாம். தேனி மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து கலைஞர்களும் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர்  ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார்.

Continues below advertisement