எம்.எல்.ஏ வேல்முருகன் மீது நடவடிக்கை எடுக்கச் சொன்ன முதல்வர் ஸ்டாலின்.! டென்சனான சபாநாயகர்...

Velmurugan- Stalin - Appavu" சட்டப்பேரவையில் இருக்கையைவிட்டு சென்று பேசிய எம்.எல்.ஏ வேல்முருகன் மீது நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.

Continues below advertisement

சட்டப்பேரவையில் சட்டப்பேரவை உறுப்பினர் நடந்து கொண்ட விதம் வேதனை அளிக்கிறது என்றும் அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு சட்டப்பேரவை தலைவர் அப்பாவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார். இந்நிலையில், இன்றைய தினம் சட்டப்பேரவையில் என்ன நடந்தது என்பது குறித்து பார்ப்போம். ‘

Continues below advertisement

சலசலப்பான சட்டப்பேரவை:

தமிழ்நாட்டில் சட்டப்பேரவை கூட்டத்தொடரானது நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தொடரில் தமிழ்நாட்டில் உள்ள துறைகளுக்கு நிதி ஒதுக்குவது தொடர்பான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இன்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் சட்டசபையில் நடந்து கொண்ட விதம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவரும் சட்டப்பேரவை உறுப்பினருமான வேல்முருகன் , இன்று சட்டப்பேரவையில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் தடை விதிக்கவில்லை என்றும் மாநில அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டு என்றும் தெரிவித்தபடியே, சட்டப்பேர்வையின் அமைச்சர்கள் இருக்கையை நோக்கி சென்றதாக கை நீட்டி பேசியதாக கூறப்படுகிறது. இதனால், இந்த நிகழ்வானது சட்டப்பேரவையில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. 

நடவடிக்கை எடுக்க சொன்ன முதல்வர் ஸ்டாலின்:

இந்த சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்ததாவது, “ வேல்முருகன் நல்ல கருத்துகளை பேசுவார். அவர் சட்டப்பேரவையில் பேசினால்,  அவரது பேச்சை நான் கேட்பேன். ஆனால், தற்போது அதிகபிரசிங்கத்தனமாக பேசியது, வேதனை அளிக்கிறது. அவையின் இருக்கும் இடத்தை விட்டு , முன்வந்து பேசுவது ஏற்புடையதல்ல. வேல்முருகன் அவையின் மாண்பை குறைக்கும் வகையில் நடந்துகொண்டது வேதனை அளிக்கிறது. இதையடுத்து, வேல்முருகன் மீது நடவடிக்கை எடுக்குமாறு, சட்டப்பேரவை உறுப்பினர் அப்பாவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார். 

சபாநயாகர் அப்பாவு :

இதையடுத்து சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்ததாவது “  வேல்முருகன் ஒருமையில் பேசியதும் மற்றும் அவையின் முன்வந்து அமைச்சர்களை நோக்கி கை நீட்டி பேசியதும் ஏற்புடையதல்ல. வேல்முருகனுக்கு , இறுதி எச்சரிக்கை விடுக்கிறேன். இனிமேல், இதுபோன்று அவையில் நடந்து கொள்ள கூடாது. தற்போது நடவடிக்கை எடுக்கவில்லை. அவரது செயல்பட்ட விதத்தை திருத்தி கொள்ள வேண்டும். இனிமேல், இதுபோன்று, யாராவது நடந்து கொண்டால் கடுமையான நடவடிக்கைப்படும் என சபாநாயகர் அப்பாவு, சட்டப்பேரவை உறுப்பினர் வேல்முருகனுக்கு எச்சரிக்கை விடுத்தார். 

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், திமுக கூட்டணியில் இருந்தாலும், அவ்வப்போது கூட்டணி கட்சிக்கு எதிராகவும், கட்சியினருக்கு எதிராகவும் கருத்துகளை தெரிவித்து வருவது கூட்டணிக்குள்ளையே சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. மேலும், வரும் 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் வேல்முருகன் நீடிப்பாரா என்றும் சந்தேகத்தையும் எழுப்பி வருகிறது. 

Also Read: சுனிதா வில்லியம்ஸ் திரும்பியதற்கு டிரம்ப்தான் காரணமா? வெடிக்கும் அரசியல்..உண்மை என்ன?

Also Read: Weather: வெயிலும் இருக்கும், மழையும் இருக்கும்: அசௌகரியம் ஏற்படும்! வானிலை மையம் எச்சரிக்கை.!

Continues below advertisement
Sponsored Links by Taboola