மதுரை - போடிநாயக்கனூர் அகல ரயில் பாதை திட்டத்தில் மதுரை - தேனி வரை பணிகள் நிறைவடைந்து ரயில் போக்குவரத்து நடைபெறுகிறது. தேனி - போடிநாயக்கனூர் இடையேயான 15 கிமீ அகல ரயில் பாதை பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளன.

 





இந்த புதிய ரயில் பாதையில் ஏற்கனவே ரயில் இன்ஜின் வெள்ளோட்டம் நடத்தப்பட்டது. தேனி - போடிநாயக்கனூர் புதிய அகல ரயில் பாதையில் டிசம்பர் 2 அன்று  120 கிமீ வேகத்தில் ரயில் இன்ஜின் அதிவேக சோதனை ஓட்டம் நடத்தி ஆய்வு செய்யப்பட்டது.  போடிநாயக்கனூரில் புறப்பட்ட ரயில் இன்ஜின் தேனிக்கு 9 நிமிடங்கள் 20 நொடியில் வந்து சேர்ந்தது. ரயில் இன்ஜினை லோகோ பைலட் முத்துகிருஷ்ணன் உதவி லோகோ பைலட் அய்யனார் ஆகியோர் இயக்கினர். ஆய்வில் தெற்கு ரயில்வே கட்டுமான பிரிவு துணை முதன்மை பொறியாளர் சூரிய மூர்த்தி, உதவி பொறியாளர் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 



 


 




ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர