மதுரை வடக்குமாசிவீதி பகுதியை சேர்ந்த பரமேஸ்வரன் என்பவர் சந்தையில் இருந்து கிர் வகை பசுமாட்டினை வாங்கிவந்து வீட்டில் வளர்த்துள்ளார். இந்நிலையில் பசு கர்ப்பமாக இருந்த நிலையில் வயிறு பெரிய அளவிற்கு வீங்கி இருந்துள்ளது. இதனையடுத்து பசு ஈன்ற பின்னரும் வயிறு பெரிதாக இருந்துவந்துள்ளது.



 இதனையடுத்து கடந்த மாதம் 23ஆம் தேதி மதுரை தல்லாகுளம் பகுதியில் உள்ள கால்நடை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அழைத்துவந்துள்ளார். இதனையடுத்து மதுரை மாவட்ட தலைமை கால்நடை மருத்துவர் வைரசாமி தலைமையிலான மருத்துவக்குழுவினர் பசுமாட்டின் வயிற்றுபகுதியை ஸ்கேன் செய்து பார்த்தபோது ப்ளாஸ்டிக் குப்பைகள் இருப்பது தெரியவந்துள்ளது.

 





இதனையடுத்து உடனடியாக மயக்கமருந்து கொடுத்து 4 மணி நேர தொடர் அறுவை சிகிச்சை செய்து பசுவின் வயிற்றுபகுதியில் இருந்து 65 கிலோ அளவிலான ப்ளாஸ்டிக் குப்பைகள் மற்றும் சாக்கு பைகள், துணிகள் கழிவுகளை அகற்றினர். இதனையடுத்து பசுமாடு அறுவைசிகிச்சை முடிவடைந்து நல்ல உடல்நலத்துடன் இருந்துவருகிறது. பசுமாட்டின் வயிற்றில் இருந்த குப்பைகளை அகற்றிய மருத்துவகுழுவினருக்கு பசுமாட்டின் உரிமையாளர் நன்றி தெரிவித்தார்.



 


இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவர் வைரசாமி..,” பசுவின் வயிற்றில் இருந்து 65 கிலோ கழிவுகள் அறுவை சிகிச்சை மூலமாக அகற்றப்பட்டு தற்போது நல்ல உடல்நலத்துடன் உள்ளது. மாடுகளை வளர்ப்பவர்கள் சாலைகளில் மேயவிடுவதால் இது போன்று ப்ளாஸ்டிக் கழிவுகள் சாப்பிட்டு உடல்நல பிரச்சினைகள் உருவாகும் என்பதால் சாலைகளை விடுவதை தவிர்க்க வேண்டும்” என்றார்.

 



 


 




ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர