நிலக்கோட்டை அருகே பச்சிளங்குழந்தை மரணத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. தாய் துர்காதேவி கள்ளக்காதலனுடன் தனிமையில் இருக்க அஜாக்கிரதையாக கிணற்றின் அருகே இறக்கிவிட்டுச் சென்றதால் வழி தவறி குழந்தை நீரில் மூழ்கி உயிரிழந்தது தெரியவந்தது. கள்ளக்காதலனுடன் தாயையும் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.


திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை அடுத்த சிலுக்குவார்பட்டியில் தோட்டத்தில் தங்கி வேலை செய்துவருபவர் பாலு (42) . அவரது அக்கா மகள் துர்காதேவி(21) .இவர் எரியோடு பகுதியைச் சேர்ந்த ராஜதுரை(31) என்பவரை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்ததாக கூறப்படுகிறது, இவர்களுக்கு ஒன்றரை வயதில் ரித்திக்கா என்ற  பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த ஓராண்டு ஆண்டுக்கு முன் கணவன் , மனைவி இடையே  கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்வதாக கூறப்படுகிறது.


இந்நிலையில், கடந்த 26-ம் தேதி துர்காதேவி நிலக்கோட்டை அருகே உள்ள தனது தாய்மாமா பாலுவின் தோட்டத்திற்கு  அவரது ஒன்றரை வயது குழந்தையுடன் வந்து தங்கியதாக கூறப்படுகிறது. அன்று இரவு விளையாடிக் கொண்டிருந்த குழந்தை திடீரென்று காணாமல் போய்விட்டதாகவும், காணாமல் போன குழந்தையை இரவு முழுவதும் தேடியும் கிடைக்காமலிருக்கவே மறுநாள் காலை குழந்தை, தோட்டத்து வீட்டின் அருகேயுள்ள கிணற்றில் பிணமாக மிதந்ததைக் கண்டு அக்கம்பக்த்தினர் உடனடியாக நிலக்கோட்டை தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் .இதைஅடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் குழந்தை ரித்திக்காவின் உடலை மீட்டு நிலக்கோட்டை காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.




இத்தகவல் அறிந்த நிலக்கோட்டை காவல்துறையினர், நேரில் சென்று குழந்தையின் உடலை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விட்டு, கிராம நிர்வாக அலுவலர் புகாரின் அடிப்படையில் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து, குழந்தை தானாக தவறி விழுந்து உயிரிழந்ததா? அல்லது வேறு ஏதும் காரணமா? என தீவிர விசாரனை செய்தனர். இதில் குழந்தை இறப்பில் திடீர் திருப்பமாக தாய் துர்கா தேவிக்கும் நிலக்கோட்டையை அடுத்த தோப்புபட்டியை சேர்ந்த அஜய் (21) என்ற வாலிபருடன் கள்ளதொடர்பு இருந்து வந்தததும், சம்பவத்தன்று இரவு அஜய்யையும் துர்கா தேவியும் தனிமையில் இருக்க காட்டுப்பகுதிக்கு சென்றனர்.




அப்போது, குழந்தை ரித்திக்காவை அஜாக்கிரதையாக கிணற்றின் அருகே இறக்கிவிட்டு சென்றதால் கிணற்றில் தவறி விழுந்த குழந்தை உயிர் இழந்தது தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து தாய் துர்காதேவி மற்றும் கள்ளக் காதலன் அஜய் இருவரையும் கைது செய்த நிலக்கோட்டை காவல் ஆய்வாளர் பேபி மற்றும் சார்பு ஆய்வாளர்கள் பாலமுத்தையா, ரவி ஆகியோர் இருவரையும் கைது செய்து நிலக்கோட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்,. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண