கூட்டம் சேர்க்க வேண்டாம்:


கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில் காவல்துறையினரை நீதிமன்றத்திற்கு வரவழைத்து கூட்டம் சேர்ப்பது ஏற்கத்தக்கதல்ல என்றும், வழக்குகளில் நீதிமன்றம் ஆஜராகுமாறு உத்தரவிட்டால் மட்டும் காவல்துறையினர் ஆஜரானால் போதும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.


வழக்கு:


தஞ்சையைச் சேர்ந்த பிரபல ரவுடி கட்டை ராஜா என்பவர் மீது பட்டீஸ்வரம், கும்பகோணம் உள்பட பல்வேறு காவல் நிலையங்களில் 16 கொலை மற்றும் கொள்ளை, வழிப்பறி வழக்குகள் உள்ளன. கும்பகோணம் திப்பிராஜபுரம் அருகே சென்னியமங்கலத்தில் செந்தில்நாதன் என்பவரை 2013-ல் கொலை செய்த வழக்கில் கட்டை ராஜா கைது செய்யப்பட்டார். அவருக்கு தூக்கு தண்டனையும், கூட்டாளிகளான ஆறுமுகம், செல்வம் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கி கும்பகோணம் விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. கட்டை ராஜாவுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உறுதி செய்வதற்காக கீழமை நீதிமன்றம் சார்பில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. ஆறுமுகம், செல்வம் ஆகியோர் ஆயுள் தண்டனையை ரத்து செய்யக்கோரி மேல்முறையீடு மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், விஜயகுமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது.


நீதிமன்றம் உத்தரவு:


அப்போது கட்டை ராஜா தரப்பில் வழக்கறிஞர் ஆஜராகவில்லை. அதையடுத்து நீதிபதிகள், கட்டை ராஜா உட்பட 3 பேரையும் கணொலி வழியாக இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டனர்.


உத்தரவிட்டால் மட்டும் ஆஜராகவும்:


அப்போது கும்பகோணம் காவல்துறையினர் நேரில் ஆஜராகியிருந்தனர். அதற்கு நீதிபதிகள், "மதுரைக்கிளையில் ஏராளமான காவல்துறையினர், வழக்குகளில் ஆஜராவதற்காக குவிந்துள்ளனர். வழக்குகளில் நீதிமன்றம் உத்தரவிட்டால் மட்டும் காவல்துறையினர் ஆஜரானால் போதும். அரசு வழக்கறிஞர்களும் அலைய வைக்காமல், உரிய தகவலைப் பெற்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். காவல்துறையினருக்கு காவல் நிலையத்தில் நிறைய வேலை உள்ளது. நீதிமன்றத்தில் காவல்துறையினர் குவிந்து, இதனையும் மினி காவல்நிலையம் போல் மாற்றி விடுகின்றனர். கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில் இதுபோல கூட்டம் சேர்ப்பது ஏற்க்கத்தக்கதல்ல என குறிப்பிட்டனர்.


Also Read: GST Council Meeting: தமிழ்நாட்டில் முதன்முறையாக ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம்.. அறிவிப்பை வெளியிட்ட நிதியமைச்சர்..




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண