மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட பள்ளபட்டி என்ற கிராமத்தின் அருகில் பொட்டப்பட்டி சாலையோரத்தில் சுமார் 20 வயது முதல் 25 வயது  மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவரின் உடல் கருகிய நிலையில் கிடப்பதாக கொட்டாம்பட்டி காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. 






 

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர்  கருகிய நிலையில் அடையாளம் தெரியாமல் கிடந்த பெண்ணின் உடலை மீட்டு உடற்கூராய்வு பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.



 





தொடர்ந்து மோப்பநாய் உதவியுடன் காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். மேலும் இளம் பெண் எரித்துக்கொலை செய்யப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.  இளம்பெண் எரித்துகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இளம்பெண்ணை கொலை செய்து வீசி எறிந்தனரா என்ற பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












' ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம் '


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண  


சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்