வத்தலகுண்டு சோதனைச் சாவடியில் உரிய ஆவணங்கள் இன்றி நகை நிறுவன சரக்கு வாகனத்தில் 3.10 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் பாராளுமன்றத் தேர்தல் நிலையான கண்காணிப்பு குழுவினரால் பறிமுதல் செய்யப்பட்டு சார்நிலை கருவூலத்தில் ஒப்படைப்பு.
Lok Sabha Election 2024: தஞ்சையில் முதலமைச்சர் ஸ்டாலின்! சென்னையில் உதயநிதி! இன்று தேர்தல் பரப்புரை!
வாகன சோதனை:
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட, தேனி - மதுரை நெடுஞ்சாலையில் வத்தலகுண்டு சோதனை சாவடியில் பாராளுமன்ற தேர்தல் நிலையான கண்காணிப்பு குழுவினர் (SST) பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, தேனியில் இருந்து வத்தலகுண்டு நோக்கி வந்த தனியார் நகை நிறுவன சரக்கு வாகனத்தை நிறுத்தி வழக்கமான சோதனையில் ஈடுபட்ட போது, தங்க நகைகள் 9 பெட்டிகளில் இருந்ததை கண்டறிந்து சோதனை செய்தத்தில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்டது தெரிய வந்தது.
ஆவணங்களின்றி வாகனத்தில் வந்த தங்க நகைகள்:
இதனை அடுத்து நிலக்கோட்டை தேர்தல் நடத்தும் துணை அலுவலர் மாரி அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான பூங்கொடி அவர்களின் உத்தரவின் பேரில், தேர்தல் பிரிவு வணிகவரித்துறையினர் மதுரையிலிருந்து வரவழைக்கப்பட்டு நகைகளை ஆய்வு செய்தனர்.
பின்னர் மேற்கொண்ட விசாரணையில் கோவையில் இருந்து தங்க நகைகளை நகைக்கடைகளுக்கு மொத்த வியாபாரத்திற்கு கொடுப்பதற்காக தேனி வந்ததாகவும், தேனியில் ஒப்படைத்து விட்டு வத்தலகுண்டு நோக்கி வரும்பொழுது தேர்தல் நிலையான கண்காணிப்பு குழுவினர் (SST) சோதனையில் ஈடுபட்டு நகைகளை பறிமுதல் செய்தது தெரியவந்தது. பிடிபட்ட மொத்த நகைகளின் மதிப்பு ரூ 3,09,79,550 ஆகும். மேலும் முறையாக தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெறாமல் கோடிக கணக்கான ரூபாய் மதிப்பீட்டில் நகைகளை விற்பனைக்கு எடுத்து வந்ததும் தெரிய வந்தது.
அடடே! லீவு போடாமல் வந்த அரசுப்பள்ளி மாணவர்கள் விமான பயணம்! நமக்கு இப்படி ஒரு டீச்சர் இல்லையே
3.10 கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்:
இதனை அடுத்து தேர்தல் விதிமுறைகளை பின்பற்றாததாலும் , உரிய ஆவணங்கள் இல்லாததாலும் நகைகளை துணை தேர்தல் நடத்தும் அலுவலரின் முன்னிலையில் நிலக்கோட்டை வட்டாட்சியர் தனுஷ்கோடி, நிலக்கோட்டை சார்நிலை கருவூலத்தில் கருவூல அதிகாரி ஜோதியிடம் ஒப்படைத்தார். பின்னர் முறையாக 9 நகைப் பெட்டிகளையும் இரண்டு மூட்டைகளாக பிரித்து மூடி முத்திரையிடப்பட்டு கருவூல காப்பக அறையில் வைத்து காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் மூடி முத்திரையிடப்பட்டு (சீல்) பூட்டப்பட்டது. 3.10 கோடி மதிப்பிலான நகைகள் தேர்தல் நிலையான கண்காணிப்பு குழுவினரால் சரக்கு வாகனத்தில் பிடிபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.