காரைக்குடியில் ஹெச்.ராசா செய்தியாளர் சந்திப்பு
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா பல்கலையில் பட்டமளிப்பு விழாவில் பா.ஜ.,க மாநில ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்....," பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் பட்டம் பெறுகின்றனர். இதை கல்வி அமைச்சர்கள் உணர வேண்டும். மாணவர்கள் பட்டம் பெறுகின்றனர். அவர்களிடம் உங்கள் கருத்துக்களை அறிவுரைகளை கூறுங்கள் என்றார்.
த.வெ.க., தலைவர் விஜய் ஆளுநர் தேவையில்லை, நீட் தேவையில்லை என தெரிவித்தது குறித்த கேள்விக்கு
ஆளுநர் தேவையில்லை என கூறும் விஜயை, மக்கள் தேவையில்லை என கூறினால் எப்படி இருக்கும். அவர் அரசியலமைப்பை படிக்க வேண்டும். ஆளுநர் குறித்து சர்ச்சையாக பேசுவது அறிவிலித்தனம். 2010ல் தமிழ்நாட்டை சேர்ந்த தி.மு.க., அமைச்சர்தான் பார்லிமெண்டில் நீட் கோரிக்கையை முன் வைத்தனர். இன்று தி.மு.க.,வும் காங்கிரசும் பேசுவது பொய்த்தனம். தி.மு.க., சொல்வதை பாலோ செய்து பேசினால்தான் நமக்கு சோறு வேகும் என விஜய் நினைக்கின்றார். திராவிட மாடல் என்பது தேசிய வெறுப்பு அரசியலின் ஆணி வேர். பாரத பிரதமரே திராவிடத்தை சேர்ந்தவர். பஞ்ச திராவிடம். இந்தியா 56 தேசங்களாக இருந்தது. அது பஞ்ச திராவிடம், பஞ்ச கவுடம் என 2 பெரிய நிலப்பரப்பாக பிரிந்தது. காடுகள் நிறைந்த பகுதி பஞ்ச திராவிடம். நாட்டின் சரித்திரம், தான் யார் என்று தெரியாதவர்கள் பேசிக்கொண்டு இருப்பார்கள். திராவிடம் என்பது இடத்தைக் குறிக்கும். இனத்தை அல்ல. இது புரியாமல் 1838ல் கால்டுவெல் கற்பித்ததை சொல்லிக் கொண்டு இருப்பார்கள்.
விஜய் ஒரே குட்டையில் ஊறிய மட்டை
நடிகர் விஜய் அந்த சித்ததாந்தை பேசினால் அவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டை. கூட்டணி குறித்து நான் பேசியது கிடையாது. இதை பற்றி முடிவெடுக்க வேண்டியது தேசிய தலைமை. நாங்கள் ஏற்கனவே கூட்டணியாகத்தான் உள்ளோம். 2014, 2019ல் எங்களுக்கு தனிப்பெரும்பான்மை இருந்தது. எங்கள் அரசாங்கம் கூட்டணி அரசாங்கம். தமிழகத்திலும் தேசிய ஜனநாயக கூட்டணிதான் 2026 தேர்தலிலும் போட்டியிடும் என்றார்.
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - South Indias UNESCO Heritage: தென்னிந்தியாவின் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்கள்: சோழர் கோயில்கள் முதல் மகாபலிபுரம் வரை
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Bommakka Song : பொன்னி நதி பாட்டு பிடிக்குமா..?அப்போ இளங்கோ கிருஷ்ணன் எழுதுன இந்த பாட்ட கேளுங்க