சமுத்திரகனி நடித்துள்ள திரு மாணிக்கம்
நந்தா பெரியசாமி இயக்கத்தில் சமுத்திரகனி நடித்துள்ள படம் திரு மாணிக்கம். நாடோடிகள் , எங்கேயும் எப்போதும் படங்களில் நடித்த அனன்யா இப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார். பாரதி ராஜா , நாசர் , தம்பி ராமையா , இளவரசு போன்ற மூத்த நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். சீதா ராமம் படத்தின் இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். பொன்னியில் செல்வன் படத்தின் பாடல்வரிகளை எழுதிய கவிஞ்ர் இளங்கோ கிருஷ்ணன் இந்த படத்தில் பாடல்களை எழுதியுள்ளார். கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி இப்படத்தின் டீசர் வெளியாகி கவனமீர்த்தது. குறிப்பாக " தவறெனில் வலியதும் வீழும், சரியெனில் எளியதும் வாழும்" என்கிற வரி அதிக கவனமீர்த்துள்ளது. டீசர் பார்ப்பதற்கு கமலின் பாபநாசம் படம் மாதிரியான ஒரு கதைக்களமாக இப்படம் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
பொம்மக்கா பாடல்
திரு மாணிக்கம் படத்தின் 'பொம்மக்கா' பாடல் சில நாட்கள் முன்பு வெளியாகியது. கணவன் மனைவி இரு மகள்கள் என ஒரு சின்ன குடும்பத்தின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக இந்த பாடலின் வரிகள் அமைந்துள்ளன. உணர்வுகளை சின்ன சின்ன உயிரினங்களின் வாழ்க்கயோடு தொடர்புபடுத்திய பாடலாசிரியரின் கற்பனை அழகாக இருக்கிறது.
இசையைப் பொறுத்தவரை நல்ல ஒரு கும்மிப்பாட்டு போல கிராமியத் தன்மையில் அமைந்திருக்கிறது. ஆனால் இரண்டாம் உலகப்போர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்த மன்னவனே பாடலின் நேரடி தாக்கத்தை இப்பாடலில் பார்க்க முடிகிறது. குறிப்பாக சரணத்தில் .
பொம்மக்கா பாடல்வரிகள் கீழே :
ஹூக்:
கைவீசு பொம்மக்கா ஏ பொம்மக்காகைவீசு பொம்மக்கா ஏ பொம்மக்கா
தொகையறா:
பொம்மக்கா பொம்மக்கா எங்க போற பொம்மக்காகூடவே நானும் வரட்டா
பொம்மக்கா பொம்மக்காராட்டினத்தில் ஏறுக்காஊரைச் சுத்திக் காட்டப்போறேகா
பல்லவி:
செங்காட்டு தோப்புலசெவலைக் குருவி கூட்டுலகும்மாளம் இன்னும் தீரல
வங்காட்டு மூலையிலவாலைக் குருவி கூத்துலகொண்டாட்டம் கூடுதே புள்ள
இந்த வானவில்லை எடுத்துஊஞ்சல் ஒண்ணு தரிச்சுசின்னஞ் சிறு தேவதைகள்ஆடட்டுமே
அந்த மேகத்தையே எடுத்துபஞ்சு மெத்த தரிச்சுசெஞ்சு வையி சாமிகளும் உறங்கட்டுமே
அனுபல்லவி:
அப்பன் முகத்துல கோபம் இல்லமனசுல கள்ளமில்ல வரமா தருவாண்டி
அம்மை விழியில நீருமில்ல நினைவில சேருமில்லவரமே அவதாண்டி
ஹூக்:
கைவீசு பொம்மக்கா ஏ பொம்மக்காகைவீசு பொம்மக்கா ஏ பொம்மக்கா
சரணம்:
வெண்டக்காய் கம்மலை வெட்டித்தாரன் போட்டுக்கோவிளையாட்டு கத்தி செஞ்சு செல்ல சண்டை போட்டுக்கோவெள்ளி நிலவை இங்க அழைப்போமாதுள்ளிக் குதிச்சு பந்து அடிப்போமா
ஹூக்:
கைவீசு பொம்மக்கா ஏ பொம்மக்காகைவீசு பொம்மக்கா ஏ பொம்மக்கா
அப்பனின் முதுகில் யானை வண்டி ஏறிக்கோஅன்னையின் கைகளில் தட்டாமாலை சுத்திக்கோஆத்தங்கரையில் ஒரு மீனைப்பிடிப்போம்தண்ணிக்குள்ளயே அதை விட்டுவிடுவோம்
தேவதை மண்ணில் வந்துவாழுகின்ற வீடு இதுஆனந்தம் என்றுமே குறையாதே
தேனீக்கள் கூட்டுக்குள்ளேரீங்காரம் என்றும் உண்டுராகங்கள் பாடுமே நிறுத்தாதே
அனுபல்லவி:
அப்பன் முகத்துல கோபம் இல்லமனசுல கள்ளமில்ல வரமா தருவாண்டி
அம்மை விழியில நீருமில்ல நினைவில சேருமில்லவரமே அவதாண்டி
ஹூக்:
கைவீசு பொம்மக்கா ஏ பொம்மக்காகைவீசு பொம்மக்கா ஏ பொம்மக்கா