South Indias UNESCO Heritage: தென்னிந்தியாவில் சோழர் கோயில்கள் மற்றும் மகாபலிபுரம் என, பல்வேறு யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்கள் உள்ளன.


தென்னிந்தியாவில் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்கள்:


தென்னிந்தியாவில் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்களின் தொகுப்பு உள்ளது. அவை ஒவ்வொன்றும் இப்பகுதியின் வளமான கலாச்சார மற்றும் வரலாற்று பாரம்பரியம் பற்றிய தனித்துவமான பார்வையை வழங்குகிறது. இந்த மதிப்புமிக்க நினைவுச்சின்னங்களில் சோழர் கோயில்கள், அவர்களது காலத்தில் கட்டப்பட்ட மூன்று அற்புதமான கட்டமைப்புகள் மற்றும் திராவிட கட்டிடக்கலையின் சிறந்த எடுத்துக்காட்டுகள் ஆகியவை அடங்கும். ஒரு காலத்தில் விஜயநகரப் பேரரசின் செழிப்பான தலைநகரமாக விளங்கிய  ஹம்பி , பசுமையான மற்றும் பாரிய பாறைகளின் நிலப்பரப்புகளில் அமைக்கப்பட்ட பிரமாண்டமான அரண்மனைகள், கோயில்கள் ஆகியவை சுற்றுலாப் பயணிகளை தங்கள் பக்கம் ஈர்க்கின்றன. 


யுனெஸ்கோ பாரம்பரிய தளங்கள்


1. சோழர் கோயில்கள், தமிழ்நாடு:




(Image Source: Twitter/@_ugra_)


தமிழ்நாட்டின் சோழர் கோயில்கள் சோழ வம்சத்தின் சிறப்பையும் திராவிடர்களின் கட்டிடக்கலை மேதையையும் பறைசாற்றுகின்றன. இவற்றில் தஞ்சாவூரில் உள்ள பிரகதீஸ்வரர் கோயில், அதன் விரிவான சிற்பங்கள் மற்றும் உயரமான விமானத்திற்காக பிரபலமானது. சிக்கலான சிற்பங்களுடன், கங்கைகொண்ட சோழபுரம் கோயில் மற்றும் தாராசுரத்தில் உள்ள ஐராவதேஸ்வரர் கோயில் ஆகியவை சோழர்களின் பொறியியல் மற்றும் கலைத் திறன்களை எடுத்துக்காட்டுகின்றன. பத்து மற்றும் பன்னிரெண்டாம் நூற்றாண்டுகளுக்கு இடையில் கட்டப்பட்ட இந்த கோயில்கள், சோழர்களின் அர்ப்பணிப்பை நிரூபிக்கும் மற்றும் தென்னிந்தியாவின் மத மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாக்கும் கட்டிடக்கலை அதிசயங்கள் ஆகும். அவை இன்றும் பிரபலமான சுற்றுலாத் தலங்களாகவும் வழிபாட்டுத் தலங்களாகவும் உள்ளன.


2. ஹம்பியில் உள்ள நினைவுச்சின்னங்களின் தொகுப்பு, கர்நாடகா:




(Image Source: Twitter/@X_MrDeepak)


விஜயநகரப் பேரரசின் தனித்துவமான நினைவுச்சின்னம், கர்நாடகாவின் ஹம்பியில் உள்ள நினைவுச்சின்னங்களின் தொகுப்பு. இது துங்கபத்ரா நதிக்கரையில் அமைந்துள்ளது. கோயில்கள், அரண்மனைகள் மற்றும் சந்தைகளுக்குப் பெயர் பெற்ற நகரமான ஹம்பி, தற்போது புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக மாறியுள்ளது. லோட்டஸ் மஹால், விட்டலா கோயில் மற்றும் விருபாக்ஷா கோயில் போன்ற சிக்கலான திராவிட கட்டிடக்கலை பாணியை வெளிப்படுத்தும் சின்னமான கட்டமைப்புகளை இந்த இடம் கொண்டுள்ளது. இது இந்தியாவின் மிகவும் பொக்கிஷமான பாரம்பரிய இடங்களில் ஒன்றாகும். 


3. மகாபலிபுரத்தில் உள்ள நினைவுச்சின்னங்களின் குழு, தமிழ்நாடு:




(Image Source: Twitter/@VertigoWarrior)


ஏழாம் மற்றும் எட்டாம் நூற்றாண்டுகளில் பல்லவர்களால் உருவாக்கப்பட்ட அற்புதமான, பாறைகளில் இருந்து வெட்டப்பட்ட கோயில்கள் மற்றும் சிற்பங்களுக்காக இந்த இடம் நன்கு அறியப்பட்டதாகும். இந்த வரலாற்றுத் தளமானது, தனித்துவமான திராவிடக் கட்டிடக்கலையுடன் கூடிய பஞ்ச ரதங்கள் ஆகியவற்றை கொண்டுள்ளன. வரலாறு மற்றும் கலாச்சாரத்தில் ஆர்வமுள்ளவர்களுக்கு, மகாபலிபுரம் ஒரு புதிரான இடமாக இருக்கிறது. இது ஆரம்பகால தமிழ் படைப்பாற்றல் மற்றும் கட்டிடக்கலை மேதைகளை வெளிப்படுத்துகிறது.


4. மேற்கு தொடர்ச்சி மலை:




(Image Source: Twitter/@NHM_WPY)


மேற்குத் தொடர்ச்சி மலைகள் இந்தியாவின் மேற்குக் கரையோரத்தில் நீண்டு பரந்து விரிந்திருக்கும் ஒரு மலைத் தொடராகும். அதன் பல்வேறு வாழ்விடங்களுக்கும் ஏராளமான வனவிலங்குகளுக்கும் பெயர் பெற்றுள்ளது. நீலகிரி தஹ்ர் மற்றும் லயன் டெயில்ட் மக்காக் போன்ற ஏராளமான உள்ளூர் மற்றும் அழிந்து வரும் உயிரினங்களுடன் 7,000 க்கும் மேற்பட்ட தாவரங்கள், 139 பாலூட்டிகள் மற்றும் 508 பறவை வகைகள் உள்ளன. 


5. பட்டடகல், கர்நாடகா:




(Image Source: Twitter/@harshagujaratan)


பட்டடகல் திராவிட மற்றும் நாகரா கூறுகளை உள்ளடக்கிய ஆரம்பகால சாளுக்கிய கட்டிடக்கலையின் நேர்த்தியான கலவைக்காக புகழ்பெற்றது. 7 மற்றும் 8 ஆம் நூற்றாண்டுகளுக்கு முற்பட்டது, இந்த தளம் சாளுக்கிய வம்சத்தால் கட்டப்பட்ட மலபிரபா நதிக்கரையில் உள்ள கோயில்களின் குழுவை உள்ளடக்கியது. மிகவும் பிரபலமான கோயில்கள் பாபநாதர் கோயில், இது அந்த பாணிகளின் அழகிய கலவையைக் காட்டுகிறது. மேலும்அதன் பிரமாண்டமான மற்றும் அழகான சிற்பங்களுக்கு பிரபலமானது  விருபாக்ஷா கோயில். பட்டடகல் இந்தியாவின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தின் சின்னமாகும்.


6. ஹொய்சாளர்களின் புனித தொகுப்பு, கர்நாடகா:




(Image Source: Twitter/@Shrimaan)


கர்நாடகாவில் உள்ள ஹொய்சாளர்களின் புனித தொகுப்புகள், பிரமிக்க வைக்கும் கோயில்களுக்கு பெயர் பெற்றவை. 11 மற்றும் 13 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் கட்டப்பட்ட இந்த கோயில்கள் ஹொய்சலா வம்சத்தின் தனித்துவமான பாணியை பிரதிபலிக்கின்றன. இதில் சிக்கலான செதுக்கப்பட்ட சோப்ஸ்டோன் மற்றும் அலங்கரிக்கப்பட்ட சிற்பங்கள் உள்ளன. பேலூர், ஹலேபிடு மற்றும் ஷ்ரவணபெலகொலா ஆகிய மூன்று முக்கிய தளங்கள் சென்னகேசவ கோயில் மற்றும் ஹொய்சலேஸ்வர கோயில் போன்ற முக்கியமான கட்டமைப்புகளை இந்த தொகுப்பு கொண்டுள்ளது.