திருப்பரங்குன்றம் விவகாரம்; கட்சிக்காரனாக கலந்துகொள்ளவில்லை - ஹெச்.ராஜா
வழக்குப்பதிவு என்பது பழிவாங்கும் நோக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்ற கேள்விக்கு எந்தவித பதிலும் அளிக்காமல் சென்றார்.
Continues below advertisement

ஹெச்.ராஜா
Source : whats app
திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக மதுரையில் நடந்த கூட்டத்தில், ‘நான் அரசியல் கட்சியை சார்ந்தவன் அல்ல; இந்துவாக கலந்துகொண்டேன், என் மீது எந்த வழக்குகளும் நிலுவையில் இல்லை, மாட்டுத்தாவணி தோரணவாயில் விபத்து என்பது இந்த அரசு எதையும் முறையாக செய்வதில்லை என்பதற்கு உதாரணம் என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கூறியுள்ளார்.
ஹெச்.ராஜா மீது வழக்குப் பதிவு
மதுரை பழங்காநத்தம் பகுதியில் இந்து முன்னணி சார்பில் திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கட்டுப்பாடுகளை மீறி பேசியதாக ஹெச்.ராஜா மீது BNS 192,196 (1ab),352,353(1ab) போன்ற பிரிவுகளில் கலவரத்தை ஏற்படுத்துதல், மத நல்லிணக்கத்தை குலைக்கும் வகையில் செயல்படுதல், பொது அமைதியை குந்தகம் விளைவித்தல், ஒரு பிரிவினருக்கு எதிராக அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் பேசுதல் போன்ற பிரிவுகளின் கீழ் சுப்பிரமணியபுரம் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
காவல்நிலையத்தில் ஹெச்.ராஜா
இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக ஹெச்.ராஜாவிற்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் நேற்று மதுரை சுப்பிரமணியபுரம் காவல்நிலையத்திற்கு அவரது வழக்கறிஞர்களுடன் வருகைதந்தார். அப்போது காவல்நிலையத்தின் முன்பாக ஏராளமான பாஜகவினரும் வருகை தந்தனர். இதனால் காவல்நிலையத்தின் முன்பாக 20க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டனர். பின்னர் ஹெச்.ராஜா காவல்நிலையத்திற்குள் வழக்கறிஞர்களுடன் சென்றபோது தங்களையும் அனுமதிக்க வேண்டும் என பாஜகவினர் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் கலைந்துசென்றனர்.
பணிகளை சரியாக செய்வதில்லை
இதையடுத்து ஒரு மணி நேரமாக ஹெச்.ராஜாவிடம் காவல்துறையினர் விசாரணை நடத்திய பின்னர் காவல்நிலையத்தில் இருந்து வெளியில் வந்த ஹெச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது..,” மதுரை சுப்பிரமணியபுரம் காவல் நிலையத்தில் என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் நோட்டீஸ் அனுப்பியிருந்தார்கள் அது தொடர்பாக நேரில் வந்து உரிய விளக்கத்தை அளித்திருக்கிறேன். மதுரை மாநகராட்சி மாட்டுத்தாவணி பகுதியில் தோரண வாயில் இடிப்பு பணியின்போது ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்து ஒருவர் சிகிச்சையில் உள்ளார். இது போன்ற பணிகளை இந்த அரசு சரியாக செய்வதில்லை என்பதற்கு இது உதராணம்” என்றார்.
என் மீது இதுவரை எந்த வழக்குகளும் நிலுவையில் இல்லை என தெரிவித்தார்
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல்கட்சிகள் அரசியல் செய்யக்கூடாது என நீதிமன்றம் கூறியுள்ளது குறித்த கேள்விக்கு?
நான் கூட்டத்தில் கலந்துகொண்டது அரசியல் கட்சித் தலைவராக பங்கேற்கவில்லை. ஒரு இந்துவாக கலந்து கொண்டேன் என தெரிவித்தார்
வழக்குப்பதிவு என்பது பழிவாங்கும் நோக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்ற கேள்விக்கு எந்தவித பதிலும் அளிக்காமல் சென்றார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - சாதிவெறியின் உச்சம்.. ‘நீ எல்லாம் எப்படிடா புல்லட் ஓட்டலாம்’ இளைஞரின் 2 கைகளை வெட்டிய கொடூரம்
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Double Decker Flyover: அடடே..! மேல மெட்ரோ, கீழே வாகன போக்குவரத்து.. கோவையில் 'டபுள் டக்கர்' மேம்பாலம், எங்கே தெரியுமா?
Continues below advertisement
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.