கிராம சபை கூட்டங்கள் உரிய விதிமுறைகளை பின் பற்றி நடத்தப்படுகிறதா? என தமிழக அரசிடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
கிராம சபை கூட்டங்கள்
தமிழகத்தில் கிராம ஊராட்சிகள் சார்பில் கிராம சபை கூட்டங்கள் நடைபெறும் நாளுக்கு 7 நாட்களுக்கு முன்னதாக, கிராம சபை கூட்டம் நடைபெறும் நாள், இடம் குறித்து தொடர்புடைய கிராம ஊராட்சிகளில் அறிவிப்பு வெளியிட வேண்டும். கிராம சபை கூட்டம் நடைபெறும்போது, கிராம மக்கள் ஒரு தீர்மானம் கொண்டு வந்தால், அதை ஏற்க வேண்டும். இந்த பணிகளை அந்த பகுதியில் உள்ள தாசில்தார்கள் ஆய்வு செய்து உறுதி செய்ய வேண்டும் என, உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. மேலும் இது குறித்து, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என கடந்த 2018 ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது.
தமிழக அரசிடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்
ஆனால், இந்த உத்தரவை முழுமையாக நடைமுறை படுத்தவில்லை. எனவே, தமிழக அரசின் ஊரக வளர்ச்சி துறை கூடுதல் தலைமை செயலாளர், உள்ளிட்ட அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் டீக்காராமன், விக்டோரியா கவுரி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அனைத்து நீதிபதிகள், கிராம சபை கூட்டம் உரிய விதிமுறைகளை பின் பற்றி நடத்தப்படுகிறாதா என தாசில்தார்கள் ஆய்வு செய்கிறார்களா என தமிழக அரசிடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
இதைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Seeman: சிக்கலில் சீமான்! கொத்தாக தி.மு.க.வுக்கு ஜம்ப் அடித்த 3000 தம்பிகள்! அடி மேல் அடி
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் Tancet 2025: தொடங்கிய விண்ணப்பப் பதிவு; டான்செட் தேர்வு கட்டணம், தகுதி, விண்ணப்ப வழிமுறைகள் இதோ!-