அமைச்சர் மாற்றத்தால் பணிகள் தொய்வு அடையாது. பணிகளை வேகப்படுத்த வேண்டும் என்பதே அரசின் நோக்கம் மதுரையில் அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் பேட்டி அளித்துள்ளார்.

 

மதுரை அழகர் கோயில் சாலையில் அமைந்துள்ள தனியார் விடுதியில் இந்திய தொழில் கூட்டமைப்பு கருத்தரங்கு மற்றும் கண்காட்சி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் டிஜிட்டல் சேவை துறை அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டு பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். 

 




 

அப்போது அவர் கூறியதாவது:

 

’’இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் நடைபெறும் இந்த கருத்தரங்கு மற்றும் கண்காட்சி, 6வது முறையாக நடைபெறுகிறது. இதில் தொழில் நிறுவனங்களில் கண்காட்சி நல்ல முறையில் நடைபெறுகிறது. இந்த கருத்தரங்கில் புதிய தொழில் நிறுவனங்களை உருவாக்குவது எப்படி என்பது குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.

 

எதிர்காலத்தில் வேலை வாய்ப்பு உருவாக்குவதிலும் மக்கள் வாழ்வில் முன்னேற்றம் கொண்டு வருவதிலும் தகவல் தொழில்நுட்பம் முக்கியமான ஒரு பங்கை வைக்கிறது. இது போன்று தகவல் தொழில்நுட்ப கருத்தறிவு நிகழ்ச்சிகள் முன்னேற்றத்தை விரைவுபடுத்துவதுமாக இருக்கிறது. மேலும் இந்த கருத்தரங்கு கண்காட்சியில் மதுரையில் உள்ள சிறந்த நிறுவனங்களில் ஸ்டால்கள் அமைக்கப்பட்டு இருக்கிறது. இதுபோன்று கருத்தரங்குகள் கண்காட்சிகள் ஆண்டுதோறும் நடைபெற வேண்டும் அது பலருக்கு பயன் படுகின்ற விதமாக இருக்கும்.



 

மதுரை வடபழஞ்சியில் உள்ள தொழில்நுட்ப பூங்காவில் கட்டிடம் கட்டுவதற்காக எடுக்கப்பட்ட நிறுவனங்கள் கட்டாமல் இருக்கிறது. அவர்களை ஊக்கப்படுத்தி விரைவாக  நிறுவனங்களை கொண்டு வருவதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. ஐடியல் பார்க் வருவதற்கு சுற்றுச்சூழல் நன்றாக இருக்கிறது.

 

தமிழக அரசு தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தொழில் வளர்ச்சிக்காக அறிவிப்புகள் செய்திருக்கிறது. கங்கை கொண்டான் நாகர்கோவிலில் அரசு அறிவித்திருக்கிறது. எனவே அரசு அறிவித்த முயற்சிகள் அங்கங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதில் எந்தவித மாற்றமும் இல்லை.

 

அமைச்சர் மாறுவதால் அறிவிப்புகள் பின்வாங்காது. பணிகள் வேகமாக இருந்தால் எல்லாம் நன்றாக இருக்கும். எந்த அமைச்சர் இருந்தால் என்ன? இல்லாட்டி என்ன? பணிகளை வேகப்படுத்த வேண்டும் என்பதே அரசாங்கத்தின் எண்ணம்’’.

 

இவ்வாறு அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.