தேனி மாவட்டம் பெரியகுளம் நகரிலிருந்து எட்டு கிலோமீட்டர் தொலைவில் கும்பக்கரை நீர்வீழ்ச்சி உள்ளது. வன தெய்வங்கள் இங்குள்ள கரையில் கும்பலாகக் கூடும் என்ற நம்பிக்கை நிலவுவதால் இதற்கு கும்பக்கரை என்ற பெயர் வந்தது. இந்த அருவியில் தண்ணீர் செல்லும் பாதைகளில் உள்ள வழுக்குப் பாறை, யானைக் கெஜம், உரல் கெஜம், பாம்பு கெஜம் என்று அழைக்கப்படும் இடங்களில் சுற்றுலாப் பயணிகள் நீராடி மகிழ்வது வழக்கம்.
இதனிடையே கும்பக்கரை அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான கொடைக்கானல் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த கன மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருவி கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் கடந்த 9 நாளாக தடை விதித்தனர். இதனால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.
இதனைத் தொடர்ந்து அருவியல் நீர்வரத்து குறைந்து சீராக உள்ளதாக கூறி இன்று காலை முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் அனுமதித்தனர். ஆனால் கும்பகரை அருவியில் நீர் வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், அருவியல் சென்று குளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாலும், பாதுகாப்பற்ற சூழ்நிலை உள்ளதால் கும்பக்கரை அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகள் அருவிப் பகுதியில் நீர் வரத்து அதிகரித்துள்ளதால் அருவியில் குளிப்பதை தவிர்த்து விட்டு அருவிக்கு முன்பாக தேங்கியுள்ள நீரில் குளித்துச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் தற்போது பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை மற்றும் தொடர் விடுமுறை நாட்கள் வந்துள்ளதால் அருவிக்கு குடும்பம் குடும்பமாக வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால் கொடைக்கானல் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதால், கும்பக்கரை அருவியில் மேலும் நீர் வரத்து அதிகரித்து மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் சூழ்நிலையில் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையில் குளிக்க வனத்துறையினர் அனுமதித்துள்ளது அபாயத்தை ஏற்படுத்தும். அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.
மேலும் படிக்க: TN Weather Update: ஒரே நேரத்தில் இரண்டு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதிகள்.. புயலாக மாறுமா? வானிலை சொல்லும் தகவல் என்ன?