தமிழ்நாட்டின் முன்னணி ஹீரோக்களில் தளபது விஜய்க்கு தனி ரசிகர் பட்டாளம் உண்டு. நடிப்பு, ஸ்டெயில், நடனம் என பன்முக திறமைகளை வெளிப்படுத்தி ரசிகர்களின் உள்ளங்களை கட்டிப்போட்டுள்ளார். திரை உலகில் பல்வேறு வெற்றிப் படங்களை கொடுத்து சாதனைகள் பல செய்துள்ளார். ‘பாக்ஸ் ஆபிஸ்’ கிங் என்று தமிழ் திரையுலகில் கால்பதித்த இவருக்கு தமிழ்நாடு மட்டுமல்லாமல் பிற மாநிலங்களிலும் ரசிகர் கூட்டம் அதிகம்.
தனது சினிமாக்களின் மூலம் மீனவர்கள், விவசாயிகள், ஏழை, எளிய மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை விதைக்கும் சினிமாக்களையே பெரும்பான்மையான எடுத்துவருகிறார். இந்நிலையில் இவரது ரசிகர்களும் இவரை பின்பற்றி உதவிகள் பல செய்துவருகின்றனர். கொரோனா காலகட்டம் என்பதால் பிறந்தநாள் விழாவை முன்பை விட தற்போது விறு,விறுப்பை குறைத்துக் கொண்டாலும் உதவியால் ஓங்கி நிற்கின்றனர். விஜய் ரசிகர்கள் அவரது பிறந்தநாள் சமயத்தில் டிரெண்டிக்கிற்கு ஏற்றார் போல் போஸ்டர் அடிப்பார்கள். அதை போல் தற்போது ஆங்காங்கே கொரோனா விழிப்புணர்வு போஸ்டர்களுடன் விஜய் பிறந்தாளை கொண்டாடினர்.
ஏழை, எளியவர்களுக்கு உணவு வழங்குதல், இரத்தான முகம், மாற்றுத்திறனாளிகள், முன்கள பணியாளர்களுக்கு இலவச பெட்ரோல், காய்கறி மற்றும் மளிகை பொருட்கள், கிருமி நாசினி, மாஸ்க் உள்ளிட்ட பல்வேறு உதவிகள் செய்தனர். அதே போல் இன்று பிறந்த 10 குழந்தைகளுக்கு மதுரை மாவட்ட விஜய் தலைமை மன்றத்தின் சார்பாக தங்க மோதிரங்கள் பரிசளிக்கப்பட்டது.
Happy Birthday Vijay: ‛ஆஞ்ச்.. பூஞ்ச்... சந்தனம் போட்டாச்சு...’ ஸ்போர்ட்ஸ் மேன் விஜய் ஸ்பெஷல்! -இந்த செய்தியை படிக்க கிளிக் செய்க.
மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் இன்று 22-6-2021 அதிகாலை 12:01 மணி முதல் பிறந்த 10 குழந்தைகளுக்கு தலா ஒரு கிராம் மதிப்புள்ள தங்க மோதிரத்தை மதுரை மாவட்ட விஜய் நற்பணி இயக்கம் தலைமையில் மதுரை மாவட்ட விஜய் நற்பணி இயக்க நிர்வாகிகள் வழங்கினார்கள்.
அதேபோல் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு கொரோனா நேரத்தில் முன்கள பணியாளர்களாக மக்களுக்கு சிறப்பாக பணிபுரியும் காவல்துறையினரை பாராட்டி மதுரை திலகர் திடல் காவல் நிலையத்திற்கு ரூபாய் 50 ஆயிரம் மதிப்புள்ள எல்.இ.டி. டி.வி. யையும் மதுரை மாவட்ட விஜய் தலைமையில் பரிசாக வழங்கினார்கள்.
ஆண்டு தோறும் விஜயின் பிறந்தநாள் விழா பல்வேறு இடங்களில் பிரம்மாண்டமான முறையில் கொண்டாடப்பட்ட நிலையில், இந்தாண்டு பலரது மனம் நிறையும் வகையில் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது பாராட்டுக்களை பெற்றுள்ளது.
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Unnoticed Vijay’s cameos: யுவன் இசையில் பாடிய விஜய்... இது தளபதியின் கேமியோ லிஸ்ட்!