நடிகர் விஜய் இன்று அவரது பிறந்தநாளை கொண்டாடுகிறார்ர். விஜய் பிறந்தநாளுக்கு ஸ்பெஷலாக எதையாவது எழுத வேண்டுமென நினைத்தால், திக்குமுக்காட வைக்கிறது. விஜயின் இளைய தளபதி டு தளபதி பயணத்தை எழுதுவதா, விஜய் பாடுவதை, ஆடுவதை, ஃபேவரைட் வசனங்களை, ஃபேவரைட் பாடல்களை.... இப்படி பட்டியிலிட்டு கொண்டே போகலாம். ஆனால், தமிழ்நாட்டை தாண்டி இந்தியாவைத் தாண்டி உலக ரசிகர்கள் பட்டாளத்தை தனக்கென உருவாக்கி வைத்திருக்கும் விஜயின் காமியோக்களை திரும்பிப் பார்ப்போம்!


ஆம்! விஜய் திரையுலகில் சில காமியோ பர்ஃபாமென்ஸ்களில் நடித்துள்ளார். இதோ அந்த லிஸ்ட்!


சுக்ரன்:



விஜயின் கேமியோ என்றவுடன் சட்டென்று பலருக்கும் நினைவில் வரக்கூடிய படம், சுக்ரன். எஸ்.ஏ.சி இயக்கத்தில் வெளியான இத்திரைப்படத்தின் டைட்டில் கேரக்டரே விஜய்தான். க்ளைமேக்ஸ் சீனில் வழக்கறிஞர் ‘சுக்ரன்’ கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார் விஜய். இதே படத்தில் ஒரு பாடலுக்கும் ஆடியிருப்பார்.


பந்தயம்



2008-ம் ஆண்டு, ‘த்ரில்லர்’ என சொல்லிக்கொண்டு வெளியானது ‘பந்தயம்’. இத்திரைப்படத்திற்கும் எஸ்.ஏ.சிதான் இயக்குனர். விஜயாகவே ஒரு சீனில் நடித்திருப்பார்.


ரவுடி ரத்தோர்


2021-ம் ஆண்டு பிரபு தேவா இயக்கத்தில் பாலிவுட்டில் வெளியான திரைப்படம் ரவுடி ரத்தோர். அக்‌ஷய் குமார் ஹீரோவாக நடித்த இப்படத்தில் ஒரு பாடலுக்கு விஜய் நடனமாடியிருப்பார்.



கேமியோ லிஸ்டில் விஜய் நடித்த படங்கள் மிகக் குறைவு. ஆனால், அவரது படங்களுக்கு தொடர்ந்து அவர் பாடி வருவதை போல வேறு சில படங்களிலும் அவர் பாடியிருக்கிறார். அடுத்த லிஸ்ட் அதுதான்.


துள்ளி திரிந்த காலம்



அருண் விஜய், குஷ்பு ஆகியோர் நடித்திருக்கும் இந்த படத்தில், ‘டக் டக் டக்’ என்ற பாடலை விஜய் பாடியிருப்பார். பிரபல பாடகர்கள் உன்னி கிருஷ்ணன், சுஜாதா ஆகியோருடன் சேர்ந்து இந்த பாடலை விஜய் அழகாக பாடியிருப்பார்.


வேலை


இதுவரை விஜய் படத்திற்கு யுவன் இசையமைக்கவில்லை என்பது பெரும்பாலான விஜய் – யுவன் ரசிகர்களுக்கு தீர்க்கப்படாத குறையாகவே உள்ளது. புதிய கீதை படத்தில் பாடல்களுக்கு மட்டும் யுவன் இசை அமைத்திருந்தாலும், யுவனின் பிஜிஎம்மில் விஜய் தெறிக்கவிட வேண்டுமென்பதே ரசிகர்களின் ஆசை.



ஆனால், யுவனின் இசையமைக்கத் தொடங்கி அவரது இரண்டாவது படத்தில் விஜய் பாடி உள்ளார் என்பது பலரும் அறியாத செய்தி. 1998-ம் ஆண்டு விக்னேஷ், நாசர், இந்திரஜா ஆகியோர் நடித்து வெளியான ‘வேலை’ என்ற திரைப்படத்தில் ‘காலத்துக்கு ஏத்த ஒரு கானா’ என்ற பாடலை விஜய் பாடியுள்ளார்.


பெரியண்ணா


எஸ்.ஏ.சி இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் இப்படத்திற்கு பரணி இசையமைத்திருப்பார். இந்த படத்தில் இரண்டு பாடல்களுக்கு விஜய் வாய்ஸ் கொடுத்திருப்பார்.



விஜய் வெறும் ஸ்டுடியோ பாடகராக இருக்கவில்லை. சில மேடை நிகழ்ச்சிகளிலும், வைவ்வாக பாடி ரசிகர்களை அதர வைத்திருப்பார். இன்னும் நிறைய பாடல்கள் பாடியும், படங்களில் நடித்தும் தொடர்ந்து மகிழ்வித்து கொண்டிருங்கள் விஜய்!