முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறப்பிற்கு பின் அ.தி.மு.க.வில் தொடர்ந்து சர்ச்சை நீடித்து வருகிறது. அமைதியாக வலம் வந்த அமைச்சர்கள் கூட தங்கள் வாயால் மக்களிடம் திட்டுக்களுக்கு ஆளாகினர். தற்போது நடந்து முடிந்த தேர்தலுக்கு பின் அ.தி.மு.க சற்று அமைதியாக இருந்துவருகிறது. இந்நிலையில் '2021' சட்டமன்ற தேர்தலில் ஜெயலலிதா தோற்றிருந்தால் 300-க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்திருப்பார்கள், ஆனால் தற்போதைய தோல்விக்கு யாரும் தூக்கிட்டு செத்திருக்கிறார்களா? என அன்வர் ராஜா பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தனியார் மஹால் ஒன்றில் அ.தி.மு.க சார்பில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் எம்.பி., அன்வர் ராஜா, மாவட்ட செயலாளர் முனியசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது ஆலோசனைக் கூட்டத்தில் அன்வர் ராஜா தொண்டர்களிடம் பேசுகையில், " கிராமத்தில் உள்ள பொதுமக்கள் தேர்தல் நேரத்தில் எதிர்பார்ப்பது பிரச்சாரத்தில் ஜெயலலிதா பெயரை சொல்கிறார்களா? புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் பெயரை சொல்கிறார்களா? என்று தான் உற்று கவனிப்பார்கள். நீங்கள் அதை சொல்ல மறந்தால், அவர்கள் உங்களை மறந்துவிடுவார்கள்.
இந்த தேர்தலில் மற்றும் பல இடங்களில் அதுதான் நடந்துள்ளது. ஆனாலும் இத்தேர்தலில் 75 இடங்களில் வெற்றி பெற்றுவிட்டோம். ஜெயலலிதா இருந்தபோதும் நாம் தோல்வி அடைந்துள்ளோம். ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது 65 இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சியாக இருந்தோம். ஜெயலலிதா ஜெயிலுக்கு சென்றபோது 200 பேர் தற்கொலை செய்து கொண்டனர். ஜெயலலிதா உயிருடன் இருந்து இத்தேர்தலில் 70 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்று ஜெயலலிதா முதலமைச்சர் பதவியை இழந்திருந்தால் 300-க்கும் மேற்பட்ட கட்சியினர் தற்கொலை செய்து கொண்டிருப்பார்கள். ஆனால் இத்தேர்தலில் தோல்வியுற்று ஆட்சிக்கு வரமுடியவில்லை இதுகுறித்து யாரும் வருத்தப்படவில்லை, யாரும் தூக்கிட்டு செத்து இருக்கிறார்களா?. என சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பேசினார்.
இராமநாதபுரம் மாவட்டம் தொடர்பான கட்டுரைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் -Karankadu Eco Tourism : காரசார நண்டு, கடல் பயணம், காரங்காடு சூழல் சுற்றுலா.. கண்டிப்பா ஒரு டூர் போடுங்க..!
பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய அன்வர் ராஜா தேர்தலுக்கு பின் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் தொண்டர்களின் உயிரை பணயம் வைப்பதுபோல் பேசிய சர்ச்சை பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் பரவ ஆரம்பித்துள்ளது. தென் மண்டலத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ராஜேந்திர பாலாஜி, திண்டுக்கல் சீனிவாசன், ஜி.பாஸ்கரன் வரிசையில் முன்னாள் எம்.பி அன்வர் ராஜா வர நினைக்கிறாரோ என பலரும் கிசுகிசுக்க ஆரம்பித்துள்ளனர்.
இதை படிக்க மிஸ் பண்ண வேண்டாம் - TN Corona Update: மதுரையில் 21 பேருக்கு கொரோனா பாதிப்பு; சிவகங்கையில் 20 பேர்!