சித்தையன்கோட்டை நரசிங்கபுரம் தாமரைகுளம் அருகில் கி.பி.11 ஆம்நூற்றாண்டைச் சோ்ந்த மூத்த தேவி சிற்பம் கண்டறியப்பட்டுள்ளது 


திண்டுக்கல் மாவட்டம் சித்தையன்கோட்டை அருகேயுள்ள நரசிங்கபுரம் பகுதி உள்ளது இந்த நரசிங்கபுரத்தில் உள்ள ஒரு தாமரைக் குளம் அருகில் கொம்பங்கரடு என அழைக்கப்படும் பகுதியில் சலப்பு வாய்க்கால் என்ற நீா் ஓடைக்கரையில்  கி.பி.11 ஆம் நூற்றாண்டைச் சோ்ந்ததாக கருதப்படும் மூத்த தேவி என்றழைக்கப்படும் தவ்வை சிற்பம் கோவில் கண்டறியப்பட்டுள்ளது. பிற்காலப் பாண்டியா்கள் காலத்தில் இப்பகுதி ஆற்றூா் நாட்டுப் பிரிவின் கீழ் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.



இப்பகுதி எரிவீர தளம் என்ற வணிக நகரமாகவும் செயல்பட்டு வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மனித உடலும், காளை மாட்டின் தலை அமைப்பையும் உடைய தனது மகன் மாந்தன், மகள் மாந்தியுடன் புடைப்புச் சிற்பமாக ஒரு பலகைக் கல்லில் மூத்ததேவியின் சி ற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மூத்த தேவி பல்லவ மன்னரான நந்திவா்மனின் குலதெய்வமாகவும் வழிபடப்பட்டது.



வலது கையில் ஒரு மலர்ந்த தாமரை மலரை ஏந்தியபடியும். இடது கை தனது வயிற்றுக்கு கீழே வைத்தபடி காணப்படுகிறது. இந்த சிலை சோழர் காலத்தை சேர்ந்ததாக கூறப்படுகிறது மூத்த தேவி சிலையை ஜேஷ்டாதேவி தேவி என்றும் அழைக்கப்படுகிறது. தமிழ் முன்னோர்கள் இந்த தேவி சிலையை வழிபட்டு வந்தனர். மூத்த தேவி என்று கூறப்படும் இந்த தமிழ் தெய்வம் காலப்போக்கில் மூதேவி என்றாகிவிட்டது.  இப்பகுதி விவசாயிகள் இம்மூத்ததேவி சிற்பத்தை தங்களின் விளை நிலங்களையும், விவசாய பயிர்களையும் காக்கும் நாட்டுப்புற தெய்வமாக கருதி வணங்கி வருகின்றனா்.



 மூதேவி ( தவ்வை )


தவ்வை ஏழு கன்னியர்களில் ஒருத்தியாக பலகாலங்களாக வழிபடப்பட்டு வந்துள்ளாள். ஆய்வாளர்கள் தாய்த் தெய்வ வழிபாட்டில் இந்த தவ்வை வழிபாடு இருந்துள்ளதாகக் கூறுகின்றனர். ஏழு கன்னியர்களுள் தவ்வை குழந்தைப் பேறு வழங்கும் தெய்வமாக வழிபடப்பட்டுள்ளார். சாக்தத்தில் இவள் வழிபாடு முக்கிய இடத்தில் இருந்துள்ளது. ஏழு கன்னியர்களில் ஒருத்தியாக வழிபடப்பட்டு பிறகு தனியாகப் பிரிக்கப்பட்டாள். சாக்த வழிபாட்டில் சக்தி பீடத்தின் வடிவான மேரு மலை பூசையில் ஒன்பது படிக்கட்டுகள் அமைக்கப்படுகின்றன. அவற்றினை நவாபரணம் என்று அழைக்கின்றனர். இந்த ஆபரணங்களில் இரண்டாவது ஆபரணமாகத் தவ்வை இருக்கிறார்.



பல்லவர்களின் ஆட்சிக் காலமான 8-ஆம் நூற்றாண்டில் தமிழர்களின் தெய்வமாக தவ்வை வழிபடப்பட்டுள்ளார். பல்லவர்கள் அமைத்த கோயில்களில் தவ்வைக்குச் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு நடைபெற்றுள்ளது. நந்திவர்ம பல்லவன் தவ்வையைக் குலதெய்வமாக வழிபாடு செய்துள்ளார். பல்லவர்கள் காலத்திற்குப் பிறகு பிற்காலச் சோழர்களின் காலத்திலும் தவ்வை வழிபாடு இருந்துள்ளது.  மூதேவி ( தவ்வை ) குறித்த தகவல் சங்க இலக்கியங்களிலும், திருவள்ளுவர், அவ்வையார் போன்ற பெரும்புலவர்களாலும் குறிப்பிடப்பட்டுள்ளனர்.


ஆன்லைன் திருட்டு எச்சரிக்கும் சைபர் க்ரைம் போலிசார். தெரிந்துகொள்ள கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்,


Cybercrime | ஆன்லைன் திருட்டு நடப்பது இப்படித்தான்... எச்சரிக்கும் போலீசார்!