கொடநாடு கொலை வழக்கில் மெத்தனப் போக்கில் செயல்பட்டு வரும் திமுக அரசை கண்டித்து ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் இணைந்து நடத்தும்  ஆர்ப்பாட்டம் தேனியில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் இணைந்து திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் இணைந்து நடைபெறும் முதல் கூட்டம் என்பதால்  தேனி மாவட்டத்தில் இருந்து ஏராளமான தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் அமமுக கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் என சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் பேசிய டிடிவி தினகரன் அருமை நண்பர் முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் தலைமையில் இந்த கூட்டம் நடைபெறுகிறது.


Abp Exclusive : காலாவதியான J&J காப்புரிமை.. மலிவு விலையில் காசநோய் மருந்துகளை இந்தியாவுக்கு கொண்டுவரும் 3 நிறுவனங்கள்..




கூட்டத்தில் பேசிய தினகரன், “நான் பிறந்தது தஞ்சை என்றாலும், எனது அரசியல் மண் தேனி மாவட்டம் தான். அன்று அம்மாவோடு இருந்த தொண்டர்கள் இன்று 90 சதவீதம் பேர் எங்களோடு தான் இருக்கிறார்கள். ஆட்சிக்கு வந்தவுடன் 3 மாதங்களில் கொடநாடு கொலை குற்றவாளிகளை பிடிக்கப்படும் என்று கூறினார் ஸ்டாலின். ஆனால் இன்னும் பிடிக்கவில்லை ஓபிஎஸ் தொண்டர்கள் மற்றும் அமமுக தொண்டர்கள் நமக்குள் இருக்கின்ற வருத்தங்களை எல்லாம் மறந்து இன்று ஒன்றிணைந்து இருக்கிறோம்.


Manipur Violence: மணிப்பூர் வன்முறை: 6,532 எஃப்ஐஆர் பதிவு...இதுவரை என்ன செய்தீர்கள்? - உச்சநீதிமன்றம் கேள்வி




அவங்களுக்கு பொழுது போகவில்லை என்றால் சந்தையில் போய் சிந்துபாத் வேலை செய்பவர்கள்” என்று ஜெயக்குமாரை விமர்சித்து பேசினார். தொடர்ந்து பேசிய அவர், கொலை கொள்ளை வழக்கில் சம்பந்தபட்ட குற்றவாளிகளை விரைவில் கண்டுபிடிக்க வேண்டும் என ஸ்டாலினை வலியுறுத்துகிறேன் எனவும் பேசினார்.


இதன் பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஓபிஎஸ் பேசும்போது, “நான் முதலமைச்சர் ஆனாலே மூன்றே மாதங்களில் கொடநாடு குற்றவாளியை கண்டுபிடிப்பேன் என்று சொல்லி தான் ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தார். ஆனால் 30 மாதங்கள் ஆகியும் இன்னும் இந்த வழக்கு ஆமை வேகத்தில் தான் நடைபெற்ற வருகிறது.


Kalaignar Womens Assistance: மகளிர் உரிமைத் தொகை; செப்., 17இல் காஞ்சிபுரத்தில் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்




கொலை செய்தவர்கள் யார் என்று நாட்டு மக்களுக்கு அடையாளம் காட்ட வேண்டும் என்பதற்காக தான் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது வருகிறது. இந்த ஆர்ப்பட்டம் தமிழகம் முழுவதும் அமமுக உடன் இணைந்து போராட்டமாக வெடிக்கும் என்று எச்சரிக்கை விடுத்தார். பின்னர் கொடநாடு கொலை வழக்கு குற்றவாளிகளை கண்டுபிடிக்க மெத்தன போக்கில் செயல்படும் திமுக வை கண்டித்து ஓபிஎஸ் கோஷங்களை எழுப்பி தொண்டர்கள் கோஷம் எழுப்ப ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.




ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.











ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண