நிதி அமைச்சர் தனியார் மஹாலில் பேசும் போது, “அரசுக்கு கொள்கை முக்கியம், அரசியல்வாதிகளுக்கு கொள்கையை போலவே மனித நேயமும், செயல்திறனும் முக்கியம். இலவசங்கள் மக்களுக்கு பயன் அளிக்கிறதா என விவாதம் நடக்கிறது. விவாதத்திற்கு அப்பால் செயல்திறன் தான் முக்கியம். செயல்படுத்தும் திட்டம் சரியாக மக்களுக்கு சென்று சேர்கிறதா என்பதே முக்கியம். இந்திய வரலாற்றில் பொருளாதாரம், சட்டம், மனித வளம் உள்ளிட்ட அனைத்து துறையிலும் மேலாண்மையை உருவாக்கி, உலகத்திலேயே சிறந்த ஆலோசகர்கள் அறிவுரையின் அடிப்படையில் இந்த அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. தனி நபர் அறிவுரை அளிப்பது போல அரசியல் ரீதியாக சிலர் அறிவுரை வழங்கி கொண்டு இருக்கிறார்கள். அரசமைப்புக்கு மீறி யார் அளிக்கும் அறிவுரையும் எங்களுக்கு தேவையில்லை. சர்வாதிகாரமாக வழங்கப்படும் அறிவுரைகளை ஒருபோதும் பின்பற்ற மாட்டோம்” என்றார்.
அரசுப் பள்ளிகளில் மிதிவண்டிகள் கொடுத்த பின் நிதி அமைச்சர் பேசுகையில், “நாடு முழுவதும் ஓடும் விவாதம், விலையில்லா பொருட்கள் வழங்குவதும் நீதிமன்றத்திலும், மத்திய அரசு தவறு, செய்யக் கூடாது என கூறி வருகின்றனர். இந்த மாதிரி ஒரு மிதிவண்டியை விலையில்லாமல் கொடுப்பது ஒரு அரசுக்கு அழகில்லை என மத்திய அரசோ, உச்சநீதிமன்றமோ சொன்னால் அதற்கு ஜனநாயகத்திற்கு எதிரான கருத்து என ஒன்று இருக்க முடியாது.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - மதுரையில் வித்தியாசமாக நடந்த இசை போட்டி; பரிசுகளை தட்டிச்சென்ற ஒலிபெருக்கி உரிமையாளர்கள்..!
சமூக நீதிக்காக கல்வி முக்கியம் அதில் குறிப்பாக பெண்கள் கல்வி முக்கியம் அதற்கு ஊக்கம் கொடுக்கும் கையில் நிதி ஒதுக்கி செயல்படுத்தக் கூடிய அரசை இலவசம் என கூறி தவறு என சொன்னால், சமுதாய துரோகத்தை என்னால் சிந்திக்க முடியவில்லை. ஊரில் பேசுபவரை எல்லாம் திருத்துவது என் வேலை இல்லை. காவி முதலாளிகள் சொல்வதை வைத்து 4 பேர் தினமும் பொய் செய்தியை பரப்பி திமுக ஆட்சி மீது குறை சொல்கிறார்கள். மிதி வண்டி மூலம் பள்ளியில் நன்கு பயில வேண்டும். இல்லம் தேடி கல்வி திட்டம் தேவைப்படும் வரை தொடர்ந்து நீட்டிப்போம்” என்றார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்