திண்டுக்கல்: எலுமிச்சை பழம் வரத்து குறைவால் விலையேற்றம்; ஒரு மூட்டை பழங்கள் ரூ.3 ஆயிரம் வரை விலை போனது

வெயிலின் தாக்கம், காலநிலை மாற்றம் ஆகியவையின் காரணமாக சிறுமலையில் எலுமிச்சை விளைச்சல் குறைந்தது. ஒரு மூட்டை எலுமிச்சை பழங்கள் ரூ.800 முதல் ரூ.3 ஆயிரம் வரை நேற்று விலை போனது

Continues below advertisement

குட்டி கொடைக்கானல் என்றழைக்கப்படும் சிறுமலையில் எலுமிச்சை, மிளகாய், காய்கறிகள் சாகுபடியில் விவசாயிகள் அதிகளவில் ஈடுபட்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக எலுமிச்சை சாகுபடியில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Continues below advertisement


இங்கு சாகுபடி செய்யப்படும் எலுமிச்சை பழங்கள் திண்டுக்கல் சிறுமலை செட் பகுதியில் செயல்படும் சந்தைக்கு கொண்டு வந்து விவசாயிகள் விற்பனை செய்கின்றனர். இந்த சந்தை வாரத்தில் புதன், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமை ஆகிய 3 நாட்கள் மட்டுமே நடைபெறும்.

Chinese Spy Ship: இலங்கையில் சீன ‘உளவு’ கப்பல்.. இந்தியாவின் ப்ளான் என்ன? நிலமையை எடுத்துச் சொன்ன அமைச்சர் ஜெய்சங்கர்!


எலுமிச்சை பழங்களின் தரம் மற்றும் வரத்தை பொறுத்து அவற்றின் விலை நிர்ணயம் செய்யப்படும். அந்த வகையில் சந்தைக்கு வழக்கமாக 10 டன் முதல் 15 டன் வரை எலுமிச்சை பழங்கள் வரத்தாகும். கடந்த மாதம் வரை 50 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை எலுமிச்சை பழங்களுக்கு ரூ.400 முதல் ரூ.2 ஆயிரம் வரை விலை கொடுத்து மொத்த வியாபாரிகள் வாங்கிச்சென்றனர்.


இந்த நிலையில் கோடை வெயிலின் தாக்கம், காலநிலை மாற்றம் ஆகியவையின் காரணமாக சிறுமலையில் எலுமிச்சை விளைச்சல் குறைந்தது. இதனால் நேற்று நடந்த சந்தைக்கு 8 டன் வரையே எலுமிச்சை பழங்கள் வரத்தானது. வரத்து குறைந்ததால் அவற்றின் விலையும் உயர்ந்தது.

Kerala Savaari App: கம்மி ரேட்! பாதுகாப்பான பயணம்! தனியாருக்கு போட்டியாக கேரளாவில் அறிமுகமானது அரசின் கால்டாக்சி!

ஒரு மூட்டை எலுமிச்சை பழங்கள் ரூ.800 முதல் ரூ.3 ஆயிரம் வரை நேற்று விலை போனது. இதுகுறித்து விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கூறும்போது, வரத்து குறைந்ததால் விலை அதிகரித்துள்ளது. ஆனாலும் சாகுபடி செலவை ஒப்பிட்டால் தற்போது கிடைத்த விலை மிகுந்த  நட்டத்தில் உள்ளதாக தெரிவித்தனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

Continues below advertisement