திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் குணா குகை பகுதியில் அத்துமீறி நுழைந்து சினிமா படப்பிடிப்பு நடந்தது குறித்து வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். கொடைக்கானல் குணா குகை பகுதியில் அத்துமீறி நுழைந்து சினிமா படப்பிடிப்பு நடந்தது குறித்து வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். சர்வதேச சுற்றுலா தலமான கொடைக்கானலில் வனத்துறை கட்டுப்பாட்டின்கீழ் உள்ள மோயர் பாயிண்ட், பைன் மரக்காடுகள், குணா குகை, தூண் பாறை போன்ற இடங்களில் பல்வேறு சினிமா படப்பிடிப்புகள் நடத்தப்பட்டு உள்ளது.


EPS: அ.தி.மு.க. பொதுச்செயலாளராக அங்கீகரிக்கப்படுவாரா இ.பி.எஸ்..? இன்று இந்திய தேர்தல் ஆணையம் முடிவு..!




அதில் 'பேய்களின் சமையலறை' என்று அழைக்கப்பட்டு வந்த குகை கமல்ஹாசன் நடித்த 'குணா' திரைப்படம் மூலம் பிரபலம் அடைந்து குணா குகை என்று அழைக்கப்பட்டு வருகிறது. இந்த குணா குகையில் பாறைகளுக்கு இடையே ஆபத்துகள் நிறைந்த பகுதியில் தவறி விழுந்து இதுவரை சுற்றுலா பயணிகள் பலர் இறந்துள்ளனர். இதனையடுத்து அந்த பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்வதை தடுப்பதற்காக வனத்துறையினர் இரும்பு வேலி அமைத்துள்ளனர்.


"சமந்தாவின் திரைவாழ்க்கை அவ்வளவுதான்… மிகவும் கீழ்த்தரமாக நடந்துகொள்கிறார்" சாடும் தயாரிப்பாளர்!




இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் கேரளாவில் இருந்து வந்த படக்குழுவினர் குணா குகைக்குள் அத்துமீறி நுழைந்து சினிமா படப்பிடிப்பு நடத்தி உள்ளனர். அப்போது அவர்கள் கியாஸ் சிலிண்டர் வைத்து சமையல் செய்து சாப்பிட்டுள்ளனர். மேலும் மரக்கிளைகளை அவர்கள் வெட்டியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி, மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் ரமேஷ் என்பவர் தலைமை வனப்பாதுகாவலர் அலுவலகத்துக்கு புகார் மனு அனுப்பினார்.


Madhyapradesh: ”உங்களுக்கு முன்னாடி அவரு”... ஆசையாக முதலிரவுக்கு சென்ற மாப்பிள்ளை.. அதிர்ச்சி கொடுத்த மனைவி..


இதைத்தொடர்ந்து நேற்று, கொடைக்கானல் குணா குகையில் முதன்மை உதவி வனப்பாதுகாவலர் ஜெபாசிஸ்ஜனா மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து குணா குகையில் படப்பிடிப்பு நடந்த இடத்தை அவர்கள் பார்வையிட்டனர். பின்னர் புகார் கொடுத்த வழக்கறிஞர் ரமேஷ் மற்றும் சமூகஆர்வலர் மகேந்திரனிடம் விசாரணை நடத்தினர். அப்போது படப்பிடிப்பு நடந்ததற்கான ஆதாரங்களை அவர்கள் சமர்ப்பித்தனர். பின்னர் சினிமா படப்பிடிப்பு நடத்த அனுமதி வழங்கிய வனத்துறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.




மேலும் செய்திகளை காண,ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண