மதுரை, தேனி, திண்டுக்கல், பட்டுக்கோட்டை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த அதிமுகவினர் அம்மா பேரவை சார்பில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
மதுரை அ.தி.மு.க., உண்ணாவிரதப் போராட்டம்
சட்டமன்றத் தேர்தலில் பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்து நிறைவேற்றாத ஆளும் தி.மு.க., அரசை கண்டித்து அ.தி.மு.க., அம்மா பேரவை சார்பில் மதுரை பழங்காநத்தம் ரவுண்டானா பகுதியில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தலைமையில் மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. குறிப்பாக இந்த உண்ணாவிரதப் போராட்டம் இன்று காலை 8 மணிக்கு துவங்கி மாலை 5 மணி வரை நடைபெறும். இந்நிகழ்வை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் கே.ராஜூ ஆகியோர் துவக்கி வைத்தனர்.
தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடன் ஆண்டுக்கு 10 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வாங்கி தருவதாக கூறி இளைஞர்களை ஏமாற்றி உள்ளனர். தி.மு.க., ஆட்சிக்கு வந்து ஒவ்வொரு வருடமும் அதிகப்படியான மின்கட்டண உயர்வை கண்டித்தும், தமிழக முழுவதும் போதைப்பொருள் பழக்கம் பெருகி வருகிறது. குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் போதைப் பழக்கம் தலைவிரித்து ஆடுகிறது எனவும், ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும், கல்லூரி மாணவர்களின் கல்வி கடன் ரத்து செய்யப்படும், சொத்து வரி உயர்வு, மாநகராட்சி வரி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அதிமுக மாநில அம்மா பேரவை சார்பில் மதுரை, தேனி, திண்டுக்கல், பட்டுக்கோட்டை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த அதிமுகவினர் அம்மா பேரவை சார்பில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். இந்த உண்ணாவிரத போராட்டத்தை இன்று மாலை 5 மணிக்கு அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் முடித்து வைக்கிறார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - ஜம்மு காஷ்மீரில் 2 ராணுவ வீரர்கள் கடத்தல்: பயங்கரவாதிகளை விடுவிக்க சதியா.! நடந்தது என்ன?
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - TN Rain Updates: மக்களே தயாரா..! 10 மாவட்டங்களில் இன்று வெளுக்கப் போகும் கனமழை - வானிலை மையம் எச்சரிக்கை