Jammu and Kashmir:


ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் வனப்பகுதியில் பயங்கரவாதிகளால்  இரண்டு ராணுவ வீரர்கள் இன்று அதிகாலை கடத்தப்பட்டனர். இருப்பினும், 2 ராணுவ வீரர்களில் ஒருவர் தப்பித்து திரும்பி வந்து விட்டார். காணாமல் போன மற்றொரு ராணுவ வீரரை, தேடும் பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர் என ANI செய்தி முகமை தெரிவித்துள்ளது. 






கடந்த ஆகஸ்ட் 27-ஆம் தேதி அனந்த்நாக் மாவட்டத்தில்  பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய 3 பேர் பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டனர். மேலும்  அவர்களிடம் இருந்த துப்பாக்கி, குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.  அதே மாவட்டத்தில் தற்போது ராணுவ வீரர் கடத்தப்பட்டிருப்பது, அவர்கள் மூவரையும் விடுவிக்க திட்டமிட்டு செய்யப்பட்ட சதியா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 


ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கான சட்டப்பேரவை தேர்தலானது நடைபெற்று , நேற்றைய தினம் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. தேர்தல் முடிவுகளில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றது. 


இந்த தருணத்தில், ராணுவ வீரர்கள் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.