தென்னக ரயில்வே மூலம் பயணிகளுக்கு பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. கிசான் ரயில் திட்டம், கூடுதல் பெட்டி இணைப்பு, பொங்கலுக்கு சிறப்பு ரயில் என பயணிகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளும் வகையில் ஊடகங்கள் மூலம் தெரியப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் சில பொய்யான தகவல்களை சிலர் போலியான கணக்குகள் மூலம் பகிர்ந்தும் வருகின்றனர். அதைப் போல் ”மதுரையில் இருந்து பழனி, பொள்ளாச்சி வழியாக மேட்டுப்பாளையம் வரை ரயில் இயக்கப்பட உள்ளதாக” தெற்கு ரயில்வேயின் பெயரில் அறிவிப்பு உலா வருகிறது. இது முற்றிலும் பொய்யான தகவல் என ரயில்வே நிர்வாகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை சற்று கவனிக்கவும் - *Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X*
இது போன்ற பொய்யான தகவல்களை பரப்பினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் மதுரையில் இருந்து பழனி, பொள்ளாச்சி வழியாக மேட்டுப்பாளையம் வரை ரயில் இயக்கப்பட உள்ளது என்று உலா வரும் தகவல் முற்றிலும் தவறு என்பதை தென்னக ரயில்வே உறுதிப்படுத்தியுள்ளது.
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - pongal 2022 | நகரத்தார்கள் நடத்திய செவ்வாய் பொங்கல் விழா - 60 கிடாய்களை ஒரே இரவில் வெட்டி கோலாகலம்
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - திண்டுக்கல்லில் நிலா பெண்ணாக தேர்வு செய்யப்படும் சிறுமி - 100 ஆண்டுகளுக்கு மேலாக நடக்கும் வினோத வழிபாடு