தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த சரவணன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் "கோவில்பட்டி நகராட்சியின் மக்கள் தொகை 2011 கணக்கு படி 95,057 என உள்ளது. இந்த கோவில்பட்டி நகராட்சி நிர்வாகம் 2019ஆண்டு வார்டு வரையறை பட்டியல் வெளியிட்டுள்ளது. கோவில்பட்டி நகராட்சி 36 வார்டுகளை கொண்டது. கோவில்பட்டி நகராட்சிக்குட்பட்ட பழைய வார்டு எண் - 17, புதிய வார்டு எண் - 13 என கடந்த 2019 ஆண்டு நகராட்சி சார்பில் வார்டு வரையறை பட்டியல் வெளியிடப்பட்டது. அதன் படி கடந்த 09.12.2021 அன்று நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. 

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மாசிமக உற்சவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்

 


 

அதில், வார்டு வரையறைக்கு சம்பந்தம் இல்லாமல் பழைய வார்டு எண் 17 -ல் புதிய வார்டு எண் 13-ல் உள்ள செக்கடி தெரு -1ல் உள்ள 380 வாக்காளர்கள் சம்பந்தம் இல்லாத புதிய வார்டு எண் 17 பழைய வார்டு எண் 24ல் சேர்ந்துள்ளனர்.  இதனால் இந்த 380 வாக்காளர்கள் பழைய தேர்தல் மையத்தில் வாக்களிக்க முடியாத படி சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் சென்று வாக்குசாவடி அமைந்துள்ளது. மேலும், இந்த இரண்டு வார்டுகளிலும் வேறு வேறு சமுதாய மக்கள் உள்ளனர். இதில் இங்கு இருந்து சென்று வாக்களிக்கவோ அவர்கள் அங்கு இருந்து இங்கு வந்து வாக்கு கேட்கவோ முடியாத நிலைமை உள்ளது. எனவே இந்த குளறு படிகளை சரி செய்து 380 வாக்களர்களையும் பழைய வார்டு 17 புதிய வார்டு 13-ல் சேர்த்து பட்டியல் வெளியிட்டு உள்ளாட்சி தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.


மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- ரேஷன் அரிசி ஏற்றி வந்த லாரி சிறைப்பிடிப்பு - அரிசியை சாலையில் கொட்டி போராட்டம்


இந்த மனு நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, வேல்முருகன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. கோவில்பட்டி நகராட்சி தரப்பில், புதிய வார்டு எண் 17 380 வாக்காளர்கள் தவறுதலாக சேர்க்கப்பட்டதாகவும், தற்போது திருத்தம் செய்து அறிவிப்பு ஆணை வெளியிடப்பட்டு உள்ளது என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நீதிபதிகள், திருத்தம் செய்யப்பட்டு வெளியிடப்பட்ட அறிவிப்பு ஆணையை கோவில்பட்டி நகராட்சி ஆணையர் மனுதாரர் மற்றும் நீதிமன்றத்திற்கு வழங்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஜனவரி 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.