திண்டுக்கல் மாவட்டத்தில் நிலக்கோட்டை, செம்பட்டி, சின்னாளபட்டி, கன்னிவாடி, ஆத்தூர், ஒட்டன்சத்திரம், பழனி, வேடசந்தூர், வடமதுரை, சாணார்பட்டி, நத்தம், தொப்பம்பட்டி உள்ளிட்ட இடங்களில் ஆண்டு முழுவதும் மலர் சாகுபடி நடைபெறுகிறது. இந்த பகுதிகளில் நடைபெறும் மலர்கள் அனைத்தும் திண்டுக்கல் அண்ணா வணிக வளாகத்தில் உள்ள மலர் சந்தைக்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுவது வழக்கம்.
Pongal 2022 : பாரம்பரிய மண்வாசனை..பொங்கல் நாள் ஒளி.. மண்பானை உணவின் நற்பலன்கள் தெரியுமா?
இச்சந்தையில் இருந்து ஒட்டன்சத்திரம் மார்க்கெட், சென்னை, மதுரை, திருச்சி, தஞ்சாவூர், கோவை திருப்பூர், நாமக்கல், திருவண்ணாமலை உட்பட பல மாவட்டங்களுக்கும் கேரளா, மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கும் டன் கணக்கிலான மலர்கள் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும் தமிழர்கள் அதிகம் வசிக்கும் மலேசியா, சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு இந்த மலர் சந்தையில் இருந்து விமானம் மூலம் மலர்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- இன்னும் 5 நாட்களில் பொங்கலோ பொங்கல்...!- பொங்கல் விரத முறைகளை விளக்கும் ஆன்மீக பெரியவர்கள்
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Madurai Taste | பர்மா இடியாப்பம்.. அவித்த காய்கறி குருமா.. இறைச்சி க்ரேவி.. மதுரையில் இப்படி ஒரு Foodie சொர்க்கம்
திண்டுக்கல் மாவட்டத்தில் மலர்கள் விளையும் பல்வேறு பகுதிகளிலும் மலர் விளைச்சல் தற்போது தொடர்ந்து அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் பருவமழை அதிகமாக பெய்து பூக்கள் விளைச்சல் நன்றாக உள்ளது. குறிப்பாக செண்டுமல்லி, வாடாமல்லி, மரிக்கொழுந்து, மல்லிகை, கனகாம்பரம், பிச்சிப்பூ, முல்லைப்பூ, காக்கரட்டான், ஜாதி மல்லி, ரோஜா, மருது, அரளிப்பூ ஆகிய பூக்கள் விளைச்சல் அதிகரித்த நிலையில், கொரோனா வைரஸ் அதிகளவில் பரவி வருவதன் எதிரொலியாக பூக்கள் வாங்க வியாபாரிகள் அதிகளவில் வராமல் இருப்பதாலும் முகூர்த்த சீசன்கள் மற்றும் விழாக்கள் கொண்டாட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் பூக்கள் விற்பனை மந்தமாக உள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இதனால் பூக்கள் விலை தற்போது அதிகரித்து விற்பனையாகி வருகிறது. மல்லிகை பூ கடந்த வாரம் வரை கிலோவிற்கு 300 முதல் 450 ருபாய் வரையில் விற்பனையானது. அதே போல் முல்லை பூ கிலோவிற்கு 200 ருபாய் வரை விற்பனையானது. இதே போல் ஒவ்வொரு பூக்களின் விலையும் குறைந்திருந்த நிலையில் கொரோனா ஊரடங்கு தாக்கத்தால் தற்போது விலை உயர்ந்துள்ளது.
இன்றைய பூக்களின் விலை விவரம் கிலோவில் வருமாறு,
- மல்லிகை - 1800
- முல்லை - 1300
- கனகாம்பரம் - 500
- ஜாதி மல்லி - 1000
- செவ்வந்தி - 80
- சம்பங்கி - 60
- அரளி - 150
- கோழி கொண்டை - 80
- செண்டு மல்லி - 40
- ரோஸ் -100
கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற இந்த லிங்கை க்ளிக் செய்யவும்