திண்டுக்கல் ஆர்.எம்.காலனி பகுதியை சேர்ந்தவர் உமையன். இவரது மகன் சிவநாத் இவர் கடந்த 2005 ஆம் ஆண்டு திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நடந்த ஒரு கொலை வழக்கு தொடர்பாக நான்காவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு விசாரணை திண்டுக்கல் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் கடந்த வாரம் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய அனைத்து குற்றவாளிகளும் விடுதலை செய்யப்பட்டனர்.
இதனிடையே இந்த வழக்கில் சிவநாத்தை விடுவித்து தருவதாக கூறி உமையனிடம் திண்டுக்கல் முருக பவனம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (32 ) என்ற இளைஞர் தன்னை ஒரு வழக்கறிஞர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு வழக்கு விசாரணை வரும் போதெல்லாம் பல்வேறு கட்டமாக சுமார் 43 லட்சம் வரை பணம் வாங்கி உள்ளார். வழக்கு விசாரணைக்கு ஆஜராகி வழக்கிலிருந்து விடுவிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்து உள்ளதாக கூறி உள்ளார், ஒருகட்டத்தில் வழக்கு விசாரணை முடிந்து விட்டதாக கூறிய கார்த்திக், உமையானிடம் சிவநாதன் வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டதாக கூறி அதற்கு விடுதலை அறிக்கை ஒன்றையும் மாவட்ட நீதிபதி கையெழுத்துடன் வழங்கியுள்ளார்.
இதில் உமையானுக்கு சந்தேகம் எழுந்துள்ளது, இதையடுத்து நீதிமன்றத்தை உமையான் நாடியுள்ளார். அங்கு கார்த்திக் ஒரு போலியான வழக்கறிஞர் என்றும் நீதிபதி கையெழுத்தை போலியாக போட்டு விடுதலை அறிக்கை கொடுத்து இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து நீதிமன்ற பரிந்துரையின்படி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி கார்த்திக்கை கடந்த மார்ச் மாதம் கைது செய்தனர் இந்த வழக்கு திண்டுக்கல் ஜுடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட் எண் 2 இல் நடைபெற்றது, இந்த நிலையில் வழக்கின் தீர்ப்பு இன்று அளிக்கப்பட்டது,
அதில் நீதிபதியின் போலியான கையெழுத்துப் போட்டு மோசடியில் ஈடுபட்ட போலி வழக்கறிஞர் கார்த்திக்கிற்கு ஐபிசி 420 மோசடி - ஓராண்டு சிறை தண்டனை மற்றும் 1,500 அபராதம், ஐபிசி 466 நீதிமன்ற ஆவணத்தை போலியாக தயாரிப்பு - 3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 5,000 அபராதம். ஐபிசி 468 ஏமாற்ற போலி ஆவணம் தயாரித்தல் - ஓராண்டு சிறை தண்டனை மற்றும் 2,000 அபராதம். ஐபிசி 471 போலி ஆவணத்தை உண்மை ஆவணம் என கூறுவது - ஓராண்டு சிறை தண்டனை மற்றும் 1,500 அபராதம். என மொத்தம் 6 ஆண்டு சிறை தண்டனையும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் 2 மாஜிஸ்திரேட்டு கார்த்தி தீர்ப்புக் கூறினர், இதையடுத்து போலி வழக்கறிஞர் கார்த்திக் சிறையில் அடைக்கப்பட்டார்.
மேலும் தகவல்களை தெரிந்துகொள்ள கீழே உள்ளலிங்கை க்ளிக் செய்யவும்,
கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் சடலம் போல் மிதந்த போதை ஆசாமியால் பரபரப்பு...!