சிவகங்கை அருகே உள்ளது கீழப்பூங்குடி. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட வீரப்பட்டி என்னும் கிராமத்தில் சுமார் 350 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருவதாக சொல்லப்படுகிறது. இப்பகுதியில் இறப்பு ஏற்பட்டால் உடலை திறந்த நிலையில் ஏரியூட்டி வருகின்றனர். இந்நிலையில் வடகிழக்கு பருவ மழை காரணமாக கால நிலை மாற்றம் ஏற்பட்டு அதிகளவு இறப்பு சம்பவம் நிகழ்கிறது.



இதை சற்று கவனிக்கவும் - Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X*

 

இந்த சூழலில் எரியூட்டும் போது மழை பெய்வதால் பாதி அளவிலேயே உடல்கள் எரிந்து முழுமையாக அஸ்தி அடையாத நிலை ஏற்படுகிறது. சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் எந்த ஒரு அதிகாரிகளும் கண்டுகொள்ளவில்லை என குற்றம்சாட்டப்படுகிறது. எனவே இப்பகுதி மக்களின் குற்றச்சாட்டு மாவட்ட நிர்வாகம் தலையிட்டு தகனமேடை அமைத்து தரவேண்டும், என்பது இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.  கொட்டும் மழையில் பிணங்களை எரிக்கும் பொழுது எடுத்த வீடியோவால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 


 



 



இது குறித்து கிராம இளைஞர்கள் கூறுகையில்...,” கீழப்பூங்குடியில் உள்ள வீரப்பட்டி கிராமத்தில் பல்வேறு குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்கள் கிராமத்தில் இறப்பு ஏற்படும் போது எரியூட்டும் பிணங்களை திறந்த வெளியில் தான் செய்கிறோம். இதனால் மழை காலங்களில் எங்களுக்கு மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. மழை காலங்களில் குளிர் தாங்க முடியாமல் முதியவர்கள் அதிகளவு இறக்கும் சூழலில் அவர்களின் உடல் மழை பெய்யும் சமயத்தில் தான் எரியூட்ட வேண்டியுள்ளது.



மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - கீழடியில் மீன் சின்னம் பொறிக்கப்பட்ட சுடுமண் உறை கிணறு கண்டுபிடிப்பு...!

பிணங்களை எரியூட்டும் நபர்கள் ஒதுங்க கூட இடம் இல்லாமல் அங்கேயே நிற்கக்கூடிய அவல நிலை தான் ஏற்படுகிறது. இது தொடர்பாக தொடர்ந்து மனு அளித்து வருகிறோம். ஆனால் அதிகாரிகளும், அரசியல் கட்சியினரும் இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே எங்களுக்கு விரைவாக தகன மேடை அமைத்துத்தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்” என்றனர்.