உசிலம்பட்டியில் எலான் மஸ்க் நிறுவனத்தின் ஸ்டார்லிங்க செயற்கைக்கோளின் தொகுப்பை கண்டு பொதுமக்கள் வியந்தனர். பறக்கும் இரயில் போன்று வானில் சென்றதை எடுத்த வீடியோ வைரலாகி வருகிறது.

 





மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் இரவு 7 மணியளவில் விண்ணில் தோன்றிய வால் நட்சத்திரம் போன்ற ஒளியை பலரும் கண்டு வியந்தனர். வானில் பறக்கும் இரயில் போன்று சென்ற இந்த ஸ்டார்லிங்க - எலான் மஸ்க் -ன், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோளின் தொகுப்பு என கூறப்படுகிறது.

உசிலம்பட்டி பகுதியில் தென்பட்ட இந்த ஸ்டார்லிங்க் செயற்கைக்கோளின் தொகுப்பை பொதுமக்கள் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ள நிலையில் இந்த வீடியோ வைரலாக வருகிறது.