தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான கொடைக்கானல் மலையிலிருந்து உருவாகும் வராகநதியின் குறுக்கே சோத்துப்பாறை மலைப்பகுதியில் இரு மலைகளுக்கு இடையே கடந்த 1987 ஆம் ஆண்டு 42 கோடி ரூபாய் செலவில் சோத்துப்பாறை அணை கட்டுமான பணிகள் தொடங்கிய நிலையில் கட்டுமானபணிகள் அனைத்தும் கடந்த 2001 ஆம் ஆண்டு நிறைவடைந்தது. 357 ஏக்கர் நில பரப்பளவில் அமைந்துள்ள சோத்துப்பாறை அணையின் மொத்த உயரம் 126.28 அடி, அணையின் முழு கொள்ளவு 100.22 மில்லியன் கன அடியாக உள்ளது. சோத்துபாறை அணையின் நீரை நம்பி 2,865 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றனது.




இந்த அணையின் மூலம் இப்பகுதி விவசாயிகள் கரும்பு, வாழை, வெற்றிலை, தென்னை, மா போன்ற விவசாயம் செய்து வருகின்றனர். மேலும் குடி தண்ணீருக்காக பெரியகுளம், வடுகப்பட்டி, மேல்மங்கலம், ஜெயமங்கலம், சிந்தவம்பட்டி, குள்ளப்புரம் என கிராம மக்க்ளின் குடிநீர் வசதி பெறுகிறது. அணை தற்போது அதன் முழு கொள்ளவை நிரப்ப முடியாத நிலை உள்ளது. இதற்கு காரணம் அணை கட்டுமான பணியின் போது எடுக்கப்பட்ட பாறைகள், வெட்டப்பட்ட மரங்களின் அடி பகுதி மற்றும் அணை கட்ட தோண்டப்பட்ட அடி தளத்தில் வெளி வந்த மண் இவை அனைத்தும் அணையின் நீர் பிடிப்பு பகுதியில் போடப்பட்டுள்ளதால் அணையில் 126அடி உயரம் வரை தண்ணீரை தேக்க முடியாத நிலை உள்ளது. அணையின் நீர் பிடிப்பு பகுதியில் எங்கு பார்த்தாலும் பாறைகள், மணல் திட்டுகள் அணையை முற்றிலும் அக்கிரிமித்துள்ளது. இதனால் மழை காலங்களில் குறைந்த அளவு தண்ணீர் தோங்கியவுடன் அணை நிரம்பி விடுகிறது.




சோத்துப்பாறை அணையின் நீர் பிடிப்பு பகுதியில் தென் மேற்கு பருவ மழை போதிய அளவு பெய்யாது போனதால் அணைக்கு நீர் வரத்து முற்றிலும் இல்லாமல் இருந்த இந்நிலையில் கடந்த 4 நாட்களாக அணையின் நீர் பிடிப்பு பகுதியில் பெய்த கன மழையின் காரணமாக அணைக்கு நீர் வரத்து துவங்கியது. நேற்று முன்தினம் அணையின் முழு கொள்ளவான 126.28 அடியில்  121.28 அடியை எட்டியது.  இரண்டே நாளில் 5 அடி உயர்ந்து  இன்று காலையில் அதன் முழு கொள்ளவான 126.28 அடியை எட்டியது.  இதனை தொடர்ந்து பெரியகுளம், வடுகபட்டி, மேலங்களம், ஜெயமங்களம், குள்ளப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வராகநதி ஆற்றங்கரையோர மக்களுக்கு பொதுப்பணித்துறையினர் மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு நீர் வெளியேற்றப்பட்டுகின்றது. அணைக்கு தற்பொழுது 51 கன அடியாக உள்ள நிலையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரிக்கும் என பொதுப்பணித்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


 


தேனி மாவட்டத்தை பற்றி தெரிந்துகொள்ள கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்,


 


Theni | மரமும்.. செடியும்... சில்லென காற்றும்.. இவ்வளவு அழகா தேனி? விசிட் ரிப்போர்ட்!


 


கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் சடலம் போல் மிதந்த போதை ஆசாமியால் பரபரப்பு...!