மதுரை கோச்சடை  முத்துராமலிங்க தேவர் சேர்ந்த தெரு பகுதியைச் சேர்ந்த தீர்த்தம் என்பவரின் மகன் பரிதி விக்னேஷ்வரன். இவர் கோவை மாவட்டத்தில்  உள்ள கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். மேலும் ஜூடோ விளையாட்டு வீரரான பரிதி விக்னேஷ்வரன் பல்வேறு போட்டிகளிலும் கலந்துகொண்டு பல்வேறு பதக்கங்களை வென்றுள்ளார். இந்த நிலையில் அடுத்த மாதம் மாநில அளவில் நடைபெறும் ஜூடோ போட்டியில் கலந்து கொள்வதற்காக பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளார். இதனிடையே நேற்று கோச்சடை பகுதியில் பரிதி விக்னேஸ்வரன் தனது நண்பர் வீட்டிற்கு சென்று கொண்டிருக்கும் பொழுது கோச்சடை முத்தையா கோவில் அருகே  மின்கம்பம் ஒன்று பழுதாகி சேதமடைந்து இருந்திருக்கிறது. பழுதான மின்கம்பத்தை மின்சார வாரியம் கிரேன் மூலம் அகற்றி மற்றொரு புதிய மின்கம்பத்தை நடும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளது. 



 

அப்பொழுது கிரேனில் இருந்த மின்கம்பம் அறுந்து சாலையில் விழுந்து இருக்கிறது. அந்த சமயத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த மாணவன் பரிதி விக்னேஷ்வரன் மீது மின்கம்பம் விழுந்ததில் மாணவனின் இடது காலில் கணுக்கால் முறிந்தது. இதனால் துடிதுடிக்க அந்தப் பகுதியில் கீழே விழுந்த மாணவன் விக்னேஷ்வரனை சக நண்பர்கள் ஆம்புலன்ஸ் உதவியுடன் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மின்கம்பம் மாற்றும் பணியின் பொழுது எந்தவித அறிவிப்பு பலகையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையும், பாதுகாப்பு உபகரணங்களும் எதையும் பின்பற்றாமல் மிகவும் அலட்சியமாக  மின்வாரியத் துறையைச் சார்ந்த அதிகாரிகள் மேற்கொண்ட பணிகளாலயே விக்னேஷ்வரனின் கால் முறிந்து  ஏற்பட்டுள்ளதாக அந்தப் பகுதி மக்களும் குற்றசாட்டு வைத்துள்ளனர்.



 

 

இன்னும் ஓரிரு வாரங்களில் நடைபெறும் ஜூடோ போட்டிக்கான மாநில போட்டியில் கலந்துகொள்ள  தயாராக இருந்த மாணவன் பரிதி விக்னேஸ்வரன் மின் வாரிய துறையின் அலட்சியமான பணியால் கால் துண்டாகி தற்போது மாணவனின் எதிர்கால வாழ்க்கையே  கேள்விக்குறியாய் இருப்பதாக மாணவனின் நண்பர்கள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். இந்நிலையில் மின்கம்பம் பொருத்தும் பணியின் பொழுது அலட்சியமாக எந்தவிதமான பாதுகாப்பு மற்றும் முன்னறிவிப்பு இன்றி பணிகள் மேற்கொண்ட கிரேன் ஆபரேட்டர் மற்றும் மின் வாரிய அதிகாரிகள் இருவர் என மூன்று பேர் மீது மீது  எஸ்.எஸ் காலனி காவல்துறையினர் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 





ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

 




 








ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண