அரசு போக்குவரத்து கழகத்திற்கு ஓட்டுநர் நடத்துனர்களை தேர்வு செய்ய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஓட்டுநர் நடத்துனர்களுக்கு வைக்கப்படும் தேர்வில் 812 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். கும்பகோணம் கோட்டத்துக்கு 174 பேரும் சேலம் கோட்டத்துக்கு 254 பேரும் தேர்வு செய்யப்பட உள்ளனர். கோயம்புத்தூர் கோட்டத்துக்கு 60 பேரும், மதுரைக்கு 136 பேரும் ,திருநெல்வேலிக்கு 188 பேரும் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணியிடங்கள் பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் இருந்தன. இந்த நிலையில் விரைவில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணிக்கு ஆட்கள் சேர்க்கப்படுவார்கள் என போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்திருந்தார். தமிழகத்தில் கும்பகோணம், கோயம்புத்தூர்,சேலம், திருநெல்வேலி ,மதுரை ஆகிய கோட்டங்களில் 1602 காலி பணியிடங்கள் இருந்தன. 1422 பணியிடங்கள் நிரப்ப போக்குவரத்து வாரியம் பரிந்துரை செய்தது.
தற்போது, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் 812 பேரை தேர்வு செய்யப்பட உள்ளதாக அரசாணை வெளியிட்டுள்ளது. இதில் கும்பகோணம் கோட்டத்திற்கு 174 பேரும், சேலம் கோட்டத்திற்கு 254 பேரும், கோயம்புத்தூருக்கு 60 நபர்களும், மதுரைக்கு 136 நபர்களும், திருநெல்வேலிக்கு 188 நபர்களும் தேர்வு செய்யப்பட உள்ளதாக அரசாணை வெளியிட்டு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இப்பணிகளுக்கான கல்வித் தகுதி பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் எனவும், தமிழ், ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டுமெனவும் கனரக வாகனங்கள் ஓட்டுநர் உரிமத்துடன் நடத்துனர் உரிமமும் வைத்திருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க,
Aavin Price: ஒரு கிலோ பன்னீர் விலை இவ்வளவா..? அதிரடியாக உயர்ந்த ஆவின் பால் பொருட்களின் விலை..!