கமிஷன் கேட்டு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்படாமல் இருந்ததாக விவசாயிகளின் புகார் தெரிவித்திருந்த நிலையில், ஏபிபி நாடு செய்தி எதிரொலியாக கொள்முதல் நிலையத்தை துவக்கி வைத்தார் திமுக மாவட்ட செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன்.


DMK FILES 2 பட்டியலை இன்று ஆளுநரிடம் வழங்குகிறாரா அண்ணாமலை..? திடீர் சந்திப்பு ஏன்..?




தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மேல்மங்கலம் பகுதியில் 1000க்கும் மேற்பட்ட ஏக்கரில் இரண்டாம் போக நெல் சாகுபடி செய்யப்பட்டு கடந்த 20 நாட்களாக அறுவடை பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மேல்மங்கலம் பகுதியில் நெல் அறுவடை செய்யப்படும் நாட்களில் அப்பகுதிகளில் ஆண்டுதோறும் இரண்டு இடங்களில் தமிழக அரசு சார்பாக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்யப்படுவது வழக்கம்.


DMK FILES 2 பட்டியலை இன்று ஆளுநரிடம் வழங்குகிறாரா அண்ணாமலை..? திடீர் சந்திப்பு ஏன்..?




ஆனால் இந்த ஆண்டு திமுக பிரமுகர் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைக்கு கமிஷன் வழங்க வேண்டும் என விவசாயிகளிடம் கூறியதாகவும், இதனால் கடந்த மூன்று நாட்களாக நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்படாமல் இருந்து வந்ததாக விவசாயிகள் குற்றச்சாட்டு எழுப்பி நேற்று மாவட்ட ஆட்சித் தலைவரிடமும் இது குறித்து புகார் தெரிவித்து நேரடியாக விவசாயிகள் மனு கொடுத்தனர்.


Tenkasi DMK : கடுப்பான திமுக தலைமை.. தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் அதிரடியாக மாற்றம்..


இந்த நிலையில் கமிஷன் தொகை கேட்டு நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட விடாமல் தடுத்து நிறுத்தியது குறித்து  ஏபிபி நாடு செய்தி வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து இன்று பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார் மற்றும் தேனி வடக்கு மாவட்ட செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் ஜெயமங்களம் பகுதியில் திறக்கப்பட்ட அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை கொள்முதல் செய்யும் பணியை துவக்கி வைத்தனர்.




Eye Flu : கண் எரிச்சலா? சாதாரணமாக நினைத்து அலட்சியப்படுத்த வேண்டாம்.. இந்த அபாயங்கள் இருக்கு..


இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தங்க தமிழ்ச்செல்வனிடம் திமுக பிரமுகர் கமிஷன் தொகை கேட்டு நெல் கொள்முதல் நிலையம் செயல்படுத்தப்படாமல் தடுத்ததாக விவசாயிகளின் குற்றச்சாட்டு குறித்து கேட்டபோது, கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் யாருக்கும் பணம் தர வேண்டாம், கொள்முதல் நிலையத்தில் மேற்கொள்ளப்படும் செலவுகள் அரசே வழங்குவதால் விவசாயிகள் யாரும் எதற்காகவும் பணம் வழங்க வேண்டாம் என தெரிவித்தார். இதன்மூலம், கமிஷன் கேட்டு மூன்று நாட்களாக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்படாமல் இருந்ததற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. தொடர்ந்து, விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.




ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.











ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண