தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்சி மலை பகுதியில் கடந்த இரண்டு மாதங்களாக போதிய மழை பெய்யாது போன நிலையில் மஞ்சளாறு அணைக்கு மேல் பகுதியில் உள்ள எலிவால் அருவியில் முற்றிலும் நீர் வரத்து இல்லாமல் வறண்டு காணப்பட்டது. தேனியில் வரண்டு காணப்படும் எலிவால் அருவியால் கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் சென்றனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள பெருமாள்மலை, சாமக்காடு, பாலமலை உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கன மழையின் காரணமாக அருவியில் நீர் வரத்து துவங்கி அருவியில் நீர் ஆர்ப்பரித்து கொட்டுகின்றது. தமிழகத்திலுள்ள அருவிகளில் மிகவும் உயராமானது எலிவால் அருவி. கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகள் அனைவரையும் முதன் முதலில் வரவேற்கும் விதமாக அமைந்துள்ள எலிவால் அருவியில் நீர் ஆர்ப்பரித்து கொட்டி வருவதை கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகள் கண்டு மகிழ்கின்றனர்.
கல்வித்துறைக்கும் ஆளுநருக்கும் என்ன பிரச்சினை? திருப்பி அனுப்பிய மசோதாக்கள் சொல்லும் ரகசியம் என்ன?
மேலும், தேனி பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் தொடர்ந்து வரும் வெள்ளப்பெருக்கின் காரணமாக 14 வது நாளாக குளிக்க விதிக்கப்பட்ட தடை தொடர்வதாக வனத்துறை அறிவித்துள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியின் நீர் பிடிப்பு பகுதிகளான மேற்கு தொடர்ச்சி மற்றும் வட்டக்கானல், வெள்ள கெவி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக அருவியல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பகுதிகளில் பாதுகாப்பு கருதி வனத்துறையினர் குளிக்க தடை விதித்தனர்.