பா.ஜ.க., நிர்வாகி கொலை வழக்கில் குற்றவாளியை காவல்துறையினர் துப்பாக்கியில் சுட்டுப்பிடித்தனர். சிவகங்கையில் கடந்த ஒரு மாதத்தில் இரண்டு குற்றவாளிகள் சுட்டுப் பிடிக்கப்பட்ட சம்பவம் குற்றவாளிகள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.


போலீசார் வாகன சோதனை


சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள ஆவரங்காடு பகுதி, மாவட்டத்தில் பரபரப்பான பகுதியாக பார்க்கப்பட்டு வருகிறது. காவல்துறையினர் இப்பகுதியை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். ஆவரங்காடு பகுதியைச் சேர்ந்தவர் சுள்ளான் அகிலன்.


இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது. சமூக வளைத்தில் பயங்கர ஆயுதங்களை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது. இந்தநிலையில் சுள்ளான் அகிலன் இன்று காலை காளையார்கோவில் பகுதியில் காரில் வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் வாகன சோதனையில் காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் ஈடுபட்டுள்ளனர். அப்பகுதியில் வாந்த வாகனத்தை மறைத்து சோதனையிட்டனர்.


- A.R.Rahman : அதிக முறை தேசிய விருதை வென்ற இசை புயல்... ஏ.ஆர். ரஹ்மானுக்கு குவியும் வாழ்த்துக்கள்...


ஆயுதங்களுடன் சுற்றிய ரெளடிய சுட்டுப் பிடித்த போலீஸ்


அந்த வாகனத்தில்  சுள்ளான் அகிலன் இருந்ததாகவும், அவரிடம் போலீசார்  விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதற்கு ஒத்துழைக்காமல் அத்துமீறி பேசியதாகவும் கூறப்படுகிறது. அப்போது, சுள்ளான் அகிலன்  வாகனத்தில் இருந்த ஆயுதங்களால் காளையார் கோவில் காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் குகனை தாக்கி விட்டு தப்பிக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது. அப்பொழுது அங்கிருந்த காவல் ஆய்வாளர் ஆடிவேல் சுட்டு பிடித்துள்ளார். காயமடைந்த சுள்ளான் அகிலன் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்து கல்லூரி மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு இன்று காலை அழைத்துச் செல்லப்பட்டார். மேலும்  காயமடைந்த காவல் உதவி ஆய்வாளர் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


இரண்டு குற்றவாளிகளை சுட்டுப் பிடித்த போலீஸ்


சமீபத்தில் நடைபெற்ற பா.ஜ.க., நிர்வாகி கொலை வழக்கில் குற்றவாளியை காவல்துறையினர் துப்பாக்கியில் சுட்டுப்பிடித்தனர்.  தற்போது ஆவாரங்காட்டைச் சேர்ந்த ரெளடி சுள்ளான் அகிலனை சுட்டிப் பிடித்துள்ளனர்.  சிவகங்கையில் கடந்த ஒரு மாதத்தில் இரண்டு குற்றவாளிகள் சுட்டுப் பிடிக்கப்பட்ட சம்பவம் குற்றவாளிகள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.


தொடர்ந்து இரும்பு கரத்தால் அடக்க வேண்டும்


இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில்.., சிவகங்கை மாவட்டத்தில் வேலையின்மை காரணமாக தொடர்ந்து பல்வேறு குற்றவாளிகள் உருவாகி வருகின்றனர். எனவே வேலை வாய்ப்புகள் அதிகப்படுத்த வேண்டும். அதே போல் குற்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும். அப்போது தான் மக்கள் சுகந்திரமாக நடமாட முடியும். காவல்துறையினர் மீதும் அச்சம் ஏற்பட்டு, குற்றம் குறையும்” என்று தெரிவித்தனர்.


இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Doctors Strike: தொடங்கியது ஸ்டிரைக்! நாடு முழுவதும் வேலை நிறுத்தத்தில் குதித்த மருத்துவர்கள்!


மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Nalla Neram Today(17-08-2024): சுப காரியங்களை எப்போது செய்யலாம்? இன்றைய நாளுக்கான பஞ்சாங்கம், நல்ல நேரம் இதோ!