அம்மா மினி கிளினிக் என்பதை மாற்றி மக்களை தேடி மருத்துவம் என்று கூறி மக்களை ஏமாற்றுகிறது தி.மு.க. என தமிழக எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் மதுரையில் பேட்டியளித்துள்ளார்.

 

மறைந்த சுவாமி சதாசிவானந்தாவின் யதி பூஜை விழா நிகழ்ச்சியில்  கலந்துகொண்ட பின் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசுகையில்..,” நெசவாளர்கள் வாழ்வில் வளர்ச்சிக்கு  பேரறிஞர் அண்ணா கைத்தறி ஆடைகளை சுமந்து விற்பனை செய்தார் நெசவாளர்களுக்கு வாழ்வில் ஒளி ஏற்றும் வகையில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.,  1983 ஆம் ஆண்டு விழா வேட்டி சேலை திட்டத்தை தொடங்கினார்.






தொடர்ந்து ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வந்தது கடந்த 2021 ஆம் ஆண்டில் கூட பொங்கல் பரிசு உடன் சேர்ந்து 490 கோடியில் விலையில்லா வேட்டி சேலை வழங்கப்பட்டது இது வருவாய் துறை மூலம் மக்களுக்கு வழங்கப்பட்டது ஏனென்றால் நானும் வருவாய் துறை அமைச்சராக பணியாற்றினேன். இதன் மூலம் 14,000 கைத்தறி நெசவாளர்கள், 54,000 விசைத்தறி நெசவாளர்கள் பயன்பட்டனர்.


- காந்திக்காக இந்தியாவிலேயே அமைந்த முதல் நினைவு அருங்காட்சியகம்; பெருமை சொல்லும் மதுரை !




Keezhadi Excavation: கீழடி அகழாய்வில் குவியலாக கிடைத்த புதிய ஆச்சரியமான விஷயங்கள்... முழு விவரம் இதோ..!


அம்மா குடிநீர், அம்மா சிமெண்ட், அம்மா மினி கிளினிக், அம்மா இருசக்கர வாகன திட்டம் என்று அம்மா ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் எல்லாம் மூடுவிழா நடத்தப்பட்டு விட்டன. தற்பொழுது அம்மா மினி கிளினிக் என்பதை மாற்றி மக்களை தேடி மருத்துவம் என்று கூறினார்கள் ஆனால் ஏற்கனவே ஆரம்ப சுகாதார நிலையங்களில் பாதிக்கப்பட்டவர்களை பெயர் பதிவு செய்து மருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றன. புதிதாக எதுவும் செய்யவில்லை மக்களை ஏமாற்றி வருகின்றனர். மேலும் சொத்து வரி உயர்வு,  மின் கட்டண உயர்வு உள்ளது தற்போது மின் பற்றாக்குறை மட்டுமல்லாதது மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது இதை கண்டித்து எடப்பாடியார் ஆணைக்கிணங்க கழக ரீதியில் உள்ள 75 மாவட்டங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது” என்றார்.





ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண