திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே முத்துலாபுரம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சுந்தர்ராஜ் -  ராக்கம்மாள் இவர்களுக்கு ஒரு ஆண் ஒரு பெண் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இதில் மகனுக்கு திருமணம் முடிந்து விட்டது. பெண்ணுக்கு திருமணம் ஆகவில்லை. சில  வருடங்களுக்கு முன்பு சுந்தர்ராஜ் இறந்து விட்டார். ராக்கம்மாள் மற்றும் மகள் நாகலட்சுமி இருவரும் தனியாக இருந்து வந்தனர்‌.


நீர் வீழ்ச்சியில் போட்டோவுக்கு போஸ் கொடுத்த இளைஞர்..... கால் தவறி அருவியில் விழுந்த அதிர்ச்சி வீடியோ..!




இந்நிலையில் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பாக தாய் ராக்கம்மாளும் உடல்நலக்குறையால் இறந்து விட்டார். இந்நிலையில் மகள் நாகலட்சுமி வயது 44. திருமணம் ஆகாத பெண் திடீரென்று நேற்று மாலை முதல் காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன் அடிப்படையில் காவல்துறையினர் தேடிவந்த நிலையில் இன்று முத்துலாபுரம் அருகிலுள்ள கிணற்றில் ஒரு பெண் சடலம் இருப்பது தெரியவந்தது. அருகில் இருந்த பொதுமக்கள் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறை  இணைந்து பெண்ணின் சடலத்தை மீட்டு வத்தலக்குண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


Gukesh Wins Gold: செஸ் ஒலிம்பியாடில் இந்தியாவிற்கு இரட்டைத் தங்கம்...! தமிழக வீரர் குகேஷ், நிகால் சரின் சரித்திர சாதனை..!




மேலும், விசாரணையில் முத்தலாபுரத்தைச் சேர்ந்த சுந்தர்ராஜ் -  ராக்கம்மாள் இவர்களின் மகள் நாகலட்சுமி என்பது தெரிய வந்தது. கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு அம்மா இறந்த மன வேதனையில் இன்று அருகில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. தற்கொலை சம்பவம் குறித்து பட்டிவீரன்பட்டி காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.




மன உளைச்சலோ, தற்கொலை எண்ணமோ மேலிடும்போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.


சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,


எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,


சென்னை - 600 028.


தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண