Keezhadi Excavation: கீழடி அகழாய்வில் குவியலாக கிடைத்த புதிய ஆச்சரியமான விஷயங்கள்... முழு விவரம் இதோ..!

தாழிக்குள் கிடைத்துள்ள சூது பவள மணிகளை  வைத்து பார்க்கையில் இது மிகவும் வசதியான செல்வந்தருடைய முதுமக்கள் தாழியாக இருக்க வாய்ப்பு இருப்பதாக தொல்லியல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Continues below advertisement

கீழடியில் கடந்த  2014 ஆம் ஆண்டு முதற்கட்ட அகழாய்வு பணி தொடங்கி 2 மற்றும் 3 கட்ட அகழாய்வு என மூன்று கட்டங்களை மத்திய தொல்லியல்துறையும், அதனைத் தொடர்ந்து நடைபெற்ற 4, 5, 6, 7 உள்ளிட்ட  அகழாய்வு பணிகளை தமிழ்நாடு தொல்லியல்துறையும் மேற்கொண்டனர். கீழடி, பகுதிகளில் நடைபெற்று வந்த 7-ஆம் கட்ட அகழாய்வு பணியானது கடந்த  ஆண்டு செப்டம்பர் மாதத்தில் முடிவடைந்தது. நடைபெற்று முடிந்த அகழாய்வு மூலம் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழங்கால பொருட்கள் கண்டறியப்பட்டன. கீழடி அகழ் வைப்பகம் கட்டும் பணியானது நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, கீழடியில் 8-ம்கட்ட அகழாய்வுப் பணி தொடங்கப்பட்டு  பிப்ரவரி முதல் செப்டம்பர் வரை அகழாய்வுப் பணி நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

 

கீழடியில் அகழாய்வுப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பாசிகள், கற்கள், யானை தந்தத்தால் செய்யப்பட்ட பகடை, விளையாட்டு சில்லுகள் என் ஏகப்பட்ட பொருட்கள் கிடைத்து வருகின்றனர். 8-ம் கட்ட அகழாய்வில் 500க்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்துள்ளன. மேலும் இந்த முதுமக்கள் தாழிகளை தொடர்ந்து அகழாய்வு செய்யும்பட்சத்தில் முதுமக்கள் தாழி உள்ளே நமது முன்னோர்கள் பயன்படுத்திய பொருட்கள் அதிகமாக கிடைக்க வாய்ப்பு இருப்பதாக தொல்லியல் துறை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

 

கீழடிக்கு உட்பட்ட கொந்தகையில் இரண்டு குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வுப் பணிகள் நடந்து வந்தது. இந்த இரண்டு குழிகளிலும் அருகே அருகே சுமார் 30 மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கொந்தகையில் இதற்கு முன்பு நடந்த இரண்டு கட்ட அகழாய்வில் விட தற்போது நடந்து வரும் 3-ம் கட்ட அகழாய்வுவில் அதிகமாக முதுமக்கள் தாழிகள் தொடர்ந்து கிடைத்து வருகிறது குறிப்பிடத்தக்கது. தற்போது வரை 50 மேற்பட்ட முதுமக்கள்தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

   இந்நிலையில் தாழி எண்  80வது   முதுமக்கள் தாழியியே திறந்து போது ஆராய்ச்சி ஆளர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.  காரணம்  இந்த முதுமக்கள் தாழி உள்ளே 74 சூது பவள மணிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தற்போது கண்டறியப்பட்ட சூதுபவள மணிகள் பார்ப்பதற்கு சிவப்பு  நேரத்தில் அழகாய்  உள்ளது. கொந்தகையில் இதற்கு முன்பு நடந்த இரண்டு கட்ட அகழாய்வில் இது மாதிரி  முதுமக்கள் தாழியினுள்  சூது பவளம் மணிகள் கிடைக்கவில்லை. இதுவே  முதன்முறையாகும்  இது மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்கு தற்போது கிடைத்துள்ள சூது பவள மணிகளை  வைத்து பார்க்கையில் இது மிகவும் வசதியான செல்வந்தருடைய முதுமக்கள் தாழியாக இருக்க வாய்ப்பு இருப்பதாக தொல்லியல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனைத் தொடர்ந்து அகழாய்வு பணிகள் கொந்தகையில் நடைபெற்று வருகின்றது.
 
 
Continues below advertisement
Sponsored Links by Taboola