தமிழகஅரசு  சொத்து வரி உயர்வு அமல் படுத்தப்பட்டுள்ளது. இதனை கண்டித்து பல்வேறு கட்சியினர் ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்கள் போன்றவை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் தமிழக பாரதிய ஜனதா கட்சி சார்பில் முன்னாள் எம்பி சசிகலா புஷ்பா தலைமையில்  நெல்லை மாவட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


Watch Video : பார்வ கற்பூர தீபமா.. புஷ்பா படப்பாடலை பாடி அசத்திய கரூர் ஆட்சியர் பிரபுசங்கர்




இதில் பாரதிய ஜனதா கட்சியை சார்ந்த மாவட்ட பொறுப்பாளர் ஜோதி உட்பட மாவட்ட நிர்வாகிகள் திரளானோர் கலந்துகொண்டு மாநில அரசின் சொத்து வரி உயர்வை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் முன்னாள் எம்பி சசிகலா புஷ்பா,


Nikki Galrani : மக்கள் அன்பா இருக்காங்க.. எங்க கல்யாணம் இப்படிதான் நடக்கப்போகுது.. நிக்கி - ஆதி அப்டேட்ஸ்..




தமிழகத்தில் அடிதட்டுமக்கள் பதைக்கப்படகூடிய வகையில் 150 சதவீதம் வரி உயர்த்தப்பட்டுள்ளது. எதற்கெடுத்தாலும் மத்திய அரசின் மீது திமுக அரசு பொய் சொல்லிவருகிறது. எதிர்கட்சி தலைவராக இருந்த போது சொத்துவரி உயர்வுக்கு மிக அதிகமாக வரி உயர்த்தபட்டதாக கண்டித்து ஸ்டாலின் பேசினார். ஆளும் கட்சியான பின்னர் திமுக மக்கள் வயித்தில் அடிக்கும் நிலையை செய்கிறது. தமிழக வருவாய்காக தமிழர் பாரம்பரிய உடையை மறந்து கோட்டு சூட்டுடன் துபாய் சென்ற தமிழக முதல்வர் துபாயில் இருந்து வருவாய் கொண்டுவருவதாக சொன்னதை போல் சொத்து வரியை உயர்த்தாமல் பல ஆயிரம் கோடியை வேறு வழியில் கொண்டுவரட்டும்.


TN Assembly Session LIVE: ‛10.5 சதவீதம் வன்னியர் இடஒதுக்கீடு... 7.5 சதவீதம் அரசு பள்ளி இடஒதுக்கீடு...’ முதல்வர் ஸ்டாலினின் முக்கிய அறிவிப்புகள்!




தமிழக மக்கள் வாக்களித்துவிட்டனர் இனி அவர்கள் தேவையில்லை என்ற எண்ணத்தில் வரி உயர்வு செய்யப்பட்டுள்ளது. திமுக ஆட்சி வந்து ஒரு வருடமாகியும் எந்த பலனும் இல்லை. 5 வருடமாக வரும் வரும் என சொல்லி கொண்டே இருக்கின்றனர். தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதியான பெண்களுக்கான 1000 ரூபாய் வரவில்லை. கல்வி கடன் தள்ளுபடி இன்னும் வரவில்லை. தேர்தலுக்காக சொன்ன 500 வாக்குறுதிக்களும் வரும் வரும் என  சொல்லிகொண்டிருந்தால் திமுக ஆட்சி பொய் வாக்குறுதிகளை கொடுத்ததற்காக  கலைக்கப்பட்டு விடும் என தெரிவித்தார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூப்பில் வீடியோக்களை காண