மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே மணிகண்டன் இயக்கத்தில் வெளியான கடைசி விவசாயி திரைப்படத்தின் நாயகனாக நடித்த முதியவரின் புகைப்படத்தை பள்ளி சுவற்றில் வரைந்து  கௌரவித்த அரசு பள்ளிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.





விஜய் சேதுபதி நடிப்பில் எம். மணிகண்டன் இயக்கத்தில் மிகுந்த வரவேற்பை பெற்றது. ’கடைசி விவசாயி‘ திரைப்படம். முன்னதாக மணிகண்டன் இயக்கத்தில் வெளியான காக்கா முட்டை திரைப்படம் மிகச்சிறந்த வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து கிருமி, குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை உள்ளிட்ட படங்களை இயக்கி இருந்தார் ஆனால் அவை காக்கா முட்டை படத்தின் வெற்றியை ஈட்டவில்லை.  




ஆண்டவன் கட்டளை படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக விஜய் சேதுபதியுடன் கூட்டணி அமைத்தார் மணிகண்டன். கடைசி விவசாயி படத்தில், விஜய்  சேதுபதியின் ஃபர்ஸ்லுக் போஸ்டர் வெளியானது முதலே படத்திற்கான ஹைப்பும் அதிகரிக்க தொடங்கி படம் வெளியான பின்பும் பலரின் ஆதரவையும் பெற்றது. 



படத்தை பார்த்த இயக்குநர் மிஸ்கின் “ஆன்மாவை சுத்தப்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் மணிகண்டன் இந்த படத்தை எடுத்திருக்கிறார். 100 ஆண்டுகளில் எடுக்கப்பட்ட சிறந்த படங்களில் கடைசி விவசாயி படத்தை சொல்லுவேன்”. என புகழ்ந்து தள்ளினார்.





திரைப்படம் வெளியாகும் முன்பே முதியவர் நல்லாண்டி மறைந்திருந்தாலும், அவரை கௌரவப் படுத்தும் நோக்கில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தாடையம்பட்டி அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளியின் சுற்றுச்சுவர் ஓவியத்தில் கடைசி விவசாயி நல்லாண்டியின் புகைப்படத்தை வரைந்து விவசாயம் சார்ந்த திருக்குறளுடன் விழிப்புணர்வு செய்யப்பட்டுள்ளது. பள்ளி சார்பில் வரையப்பட்டுள்ள இந்த கடைசி விவசாயியின் ஓவியத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.

 

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் 

தொழுதுண்டு பின்செல் பவர்’ - என்ற வள்ளுவரின் குறல் பள்ளி சுவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.