TN Assembly Session LIVE: 'அதிமுகவை பகைவராக நினைக்கவில்லை” - பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ வேலு
TN Assembly Session 2022 LIVE Updates: தமிழ்நாடு பட்ஜெட் மீதான மானிய கோரிக்கை விவாதம் கூட்டம் நிகழ்வுகள் உடனுக்குடன் விரைவாக கீழே லைவ் ப்ளாகில் காணலாம்.
அதிமுகவை நாங்கள் பகைவராக நினைக்கவில்லை என பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ வேலு சட்டப்பேரவையில் பேசி இருக்கிறார்
அயோத்தியா மண்டபம் விவகாரத்தில் அரசியலை புகுத்தி கட்சியை பலப்படுத்த நினைத்தால் அது நடக்காது என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்
சட்டமன்றத்தில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், பெட்ரோல், சிலிண்டர் விலை உயர்வு உள்ளிட்ட சாமானிய மக்கள் பிரச்சனையில் மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும் என தெரிவித்திருக்கிறார்
முதலமைச்சரின் தீர்மானத்தை ஆதரித்துப் பாமக சட்டப்பேரவை உறுப்பினர் ஜி.கே.மணி சட்டப்பேரவையில் பேசும்போது, ''ஏழை, நடுத்தர மக்களின் கல்வியைக் காக்கும் தீர்மானம்.
க்யூட் தேர்வு எதிர்காலத்தில் தமிழ்நாட்டு அரசுக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கும் வரும் என்று அச்சப்படுகிறோம். ஏழைகளுக்கு எட்டாக் கனியாக உள்ள நீட் தேர்வின் மறுவடிவமே க்யூட். ஏழை மாணவர்கள் கல்லூரி இளங்கலைப் படிப்புகளில் சேரப் போடப்படும் முட்டுக்கட்டையே க்யூட். தனியார் பயிற்சி மையங்களின் வணிகத்தை ஆதரிக்கவே இந்தத் தேர்வு கொண்டு வரப்பட்டுள்ளது'' என்று ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் எம்எல்ஏவுமான ஜவாஹிருல்லா சட்டப்பேரவையில் பேசும்போது, ''மாநிலங்களின் உரிமைகள் மீது மத்திய அரசு துல்லியத் தாக்குதல் நடத்தி வருகிறது. முக்கியமாகக் கல்வித்துறையில் தமிழ்நாட்டை மையமாக வைத்துத் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.
பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, கிராமப்புற மக்கள் தமிழகத்தில் கல்வியில் முன்னேற்றம் பெற்றுள்ளார்கள். ஏனெனில் அப்போதெல்லாம் நீட், க்யூட் ஆகிய தேர்வுகள் கிடையாது. இப்போது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நுழைவுத் தேர்வு மோசமானது'' என்று ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
உயர் கல்வித்துறை முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் சட்டப்பேரவையில் பேசும்போது, ''க்யூட் தேர்வால் மாணவர்களிடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இதனால் ஏழை எளிய மாணவர்கள் பாதிக்கப்படுவர். எதிர்காலத்தில் நுழைவுத் தேர்வு கட்டாயம் என்ற நிலை ஏற்படும். இந்த அறிவிப்பைத் திரும்பப் பெற வேண்டும்'' என்று கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.
மத்திய பல்கலைக்கழகங்களில் பொது நுழைவுத்தேர்வை ரத்து செய்யக்கோரி சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் தனித்தீர்மானம் கொண்டு வந்தார்.
இந்தத் தீர்மானத்தை எதிர்த்தும், மறு பரிசீலனை செய்யக் கோரியும் பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் எம்எல்ஏவுமான ஈ.ஆர். ஈஸ்வரன் சட்டப்பேரவையில் பேசும்போது, ''ஒரு பண்பாட்டை ஒழிக்க வேண்டுமெனில், அங்குள்ள கல்வியின்மீது தாக்குதல் நடத்த வேண்டும். அதைத்தான் மத்திய அரசு செய்து வருகிறது.
நுழைவுத் தேர்வுகள் வரவர, ஆசிரியர்கள் மீது மரியாதை குறைந்து, பயிற்சி மையங்களின் மீதுதான் மரியாதை அதிகரிக்கிறது. கட்டுப்பாடில்லாத தலைமுறையை வளர்க்கவே நுழைவுத் தேர்வுகள் உதவும்'' என்று தெரிவித்துள்ளார்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனரும் எம்எல்ஏவுமான தி.வேல்முருகன் சட்டப்பேரவையில் பேசும்போது, ''கல்வி உரிமையைப் பறிக்கும் பாதகச் செயல். நீட் கொண்டுவந்து, எப்படி மருத்துவப் படிப்புக்காகத் தடை கொண்டுவந்தார்களோ அதேபோல கல்லூரிப் படிப்புக்கும் நுழைவுத் தேர்வு கொண்டுவரப்பட்டுள்ளது.
க்யூட் தேர்வில், பெயர் வேண்டுமானாலும் க்யூட்டாக இருக்கலாம். தேர்வு மோசமானது. இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழ்நாட்டில் இந்தத் தேர்வை எதிர்த்து, தீர்மானம் போட்டதற்குப் பாராட்டு தெரிவிக்கிறோம்'' என்று தெரிவித்துள்ளார்.
மத்திய பல்கலைக்கழகங்களில் பொது நுழைவுத்தேர்வை ரத்து செய்யக்கோரி சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் தனித்தீர்மானம் கொண்டு வந்தார்.
பாமக உறுப்பினர் ஜி.கே.மணியின் கேள்விக்கு பதிலளித்த தமிழ் வளர்ச்சி, பண்பாட்டுத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ''மாநிலம் முழுவதும் 17 இசைப் பள்ளிகள் நடந்துகொண்டிருக்கின்றன. 4 இடங்களில் இசைக் கல்லூரிகள் உள்ளன. இசை பல்கலைக்கழகமே தனியாக அமைக்கப்பட்டு, செயல்பட்டு வருகிறது. இந்து சமய அறநிலையத்துறை சார்பிலும் இசைக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.
மாணவர்களின் தேவையைக் கருத்தில்கொண்டு, வருங்காலத்தில் கூடுதலாக இசைப் பள்ளிகள் அமைக்கப்படும்'' என்று தெரிவித்துள்ளார்.
’உலகின் ஆதி இசை தமிழிசை. ஒவ்வொரு மாவட்டத்துக்கும் இசைப்பள்ளியைத் தொடங்குவதன் மூலம், தமிழிசையைத் தமிழக அரசு வளர்த்தெடுக்குமா? இசைக் கலைஞர்களுக்குப் போதிய உதவிகள் கிடைக்குமா?’ என்று பாமக சட்டப்பேரவை உறுப்பினரான ஜி.கே.மணி கேள்வி எழுப்பினார்.
நலிவுற்ற கலைஞர்களின் உதவித்தொகை உயர்த்தப்பட்டுள்ளது. செவ்வியல் கலை வடிவங்கள் நாடு முழுவதும் எடுத்துச் செல்லப்படும். நாட்டார் கலை வடிவங்களை நம்ம ஊர் திருவிழா என்ற பெயரில் சென்னையில் காட்சிப்படுத்தி உள்ளோம் என்று தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையின் இன்றைய அமர்வு கூடியது. கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். CUET தேர்வு கட்டாயம் என்ற மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரவையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.
அதிமுக ஆட்சியில் நீக்கப்பட்ட மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் பணி - முதலமைச்சர் ஸ்டாலின்
உக்ரைன் மாணவர்கள் தமிழ்நாடு திரும்ப உதவிய தமிழ்நாடு அரசுக்கு நன்றி - பேரவை உறுப்பினர்கள் நன்றி
தேவையான நிலம் கையகப்படுத்தப்பட்ட பின்பு வேளான் பல்கலை அமைக்கும் முடிவு குறித்து ஆலோசிக்கப்படும் - அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்
டெல்டா பகுதியில் வேளாண் பல்கலைக்கான வாய்ப்புகள் பரிசீலிக்கப்படும். ஆய்வுசெய்து நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்
தமிழ்நாட்டு முழுவதும் 41 இடங்களில் அரசு மற்றும் தனியார் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் இயங்கி வருகின்றன - தங்கம் தென்னரசு
காவிரி டெல்டா பகுதிகளில் வேளாண் சார்ந்த உணவு பதப்படுத்தல் தொழிற்சாலைகளை அமைக்க முன்னுரிமை - அமைச்சர் தங்கம் தென்னரசு
திருவண்ணாமலை தொழில் வாய்ப்புகளுக்காக நிலம் கையகப்படுத்தல் நடவடிக்கையின்போது எதிர்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் - அமைச்சர் தங்கம் தென்னரசு
செய்யாறு பகுதியில் தொழில் நிறுவனங்களுக்கான சாத்தியக்கூறுகள் ஆய்வு செய்யப்படும் - அமைச்சர் தங்கம் தென்னரசு
தமிழ்நாட்டில் எதிர்காலத்தில் 100 நாள் வேலை திட்ட பணிநாட்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சட்டமன்ற உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் பெரியகருப்பன் பதிலளித்தார்
வன்னியர் இடஒதுக்கீடு தொடர்பாக நிபுணர்களுடன் ஆலோசித்து சமூக நீதி நிலைநாட்டப்படும் -முதல்வர் ஸ்டாலின்
வன்னியர் இடஒதுக்கீடு வழக்கில் அரசு தீவிரமாக வாதாடியது. சட்டமன்றத்தில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
வன்னியர் இடஒதுக்கிடு குறித்து முதல்வர் ஸ்டாலின் விளக்கம். சட்டமன்ற தேர்தலுக்காக அவசர அவசரமாக வெளியான அறிவிப்பு என முதல்வர் குற்றச்சாட்டு
நூலகத்தின் முக்கியத்துவத்தை அறிந்த அரசாக செயல்பட்டு வருகிறோம்; மே 7ஆம் தேதி பொறுப்பேற்ற மறுநாளே அண்ணா நூற்றாண்டு நூலகத்தை ஆய்வு செய்ய முதல்வர் எனக்கு உத்தரவிட்டார்- பேரவையில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சு
திருத்தணி முருகன் கோயிலுக்கு மாற்றுப்பாதை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் சேகர் பாபு
திருநீர்மலை, திருக்கழுக்குன்றம், மலைக்கோட்டை கோயில்களுக்கு ரோப் கார் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் சேகர் பாபு
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் தெய்வங்களும் மகிழ்ச்சியாக இருக்கும் சூழல் நிலவுகிறது- அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பேரவையில் பேச்சு
மானாமதுரை சார் பதிவாளர் புது கட்டடம் வேண்டும் என கேட்டார் தமிழரசி எம்.எல்.ஏ. மராமத்து செய்யப்பட்டது என அமைச்சர் மூர்த்தி தெரிவித்த நிலையில், மறுபரிசீலனைக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது.
துபாய் பயணத்தில் ரூ.6,100 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது - முதலமைச்சர் ஸ்டாலின்
10 மாதங்களில் 130 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன - முதல்வர் மு.க ஸ்டாலின்
தொலைதூர கிராமங்களுக்கு மருத்துவ சேவைகளை வழங்கும் திட்டத்தை நாளை மறுநாள் தொடங்கி வைக்கிறார் முதல்வர் - அமைச்சர் மா.சுப்ரமணியன்
25 ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்படவிருக்கிறது. வேடந்தாங்கல் பகுதியில் அதற்கான சூழலை ஆய்வுசெய்து நடவடிக்கை எடுக்கப்படும். சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேலு கேள்விக்கு அமைச்சர் மா.சுப்ரமணியன் பதில்
8,905 மின்மாற்றிகள் அமைப்பதற்காக, ரூ.625 கோடி நிதியை வழங்குவதற்கான நிதி ஒதுக்கப்பட்டு, ஆறு மாதத்தில் நிறைவுசெய்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளோம். பிரச்சனை இருக்கும் பகுதிகளில் லோ வோல்டேஜ் பிரச்சனைகள் சரிசெய்யப்படும் - அமைச்சர் செந்தில் பாலாஜி.
சிதம்பரம் பகுதியில் துறைமுகம் அமைப்பதற்கான சூழலை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்
ராமநாதபுரத்தில் மீன்பிடி துறைமுகம் அமைக்க, ஆய்வு செய்வதற்கான நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது - அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்
ராமநாதபுரத்தில் மீன்பிடி துறைமுகம் அமைக்க, ஆய்வு செய்வதற்கான நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது - அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்
வடமாவட்டங்களில் தொழில் துறை வளர்ச்சிக்கான நோக்கத்துடன், தொழிற்பூங்காக்கள் அமைக்க ஆராய்ந்து, சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கும்.
வேலூரில் தொழிற்பூங்கா அமைப்பதற்கான சூழல் இருந்தால், ஆராய்ந்து அதற்கான முயற்சி மேற்கொள்ளப்படும் - அமைச்சர் தங்கம் தென்னரசு
சோளிங்கர் தொகுதியில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் அமைக்கப்படும் - அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் பதில்
கோவையில் பாதுகாப்பு தொடர்பான தொழில் நிறுவனங்கள் வருவதற்கான வாய்ப்பு உள்ளது என மத்திய அரசு உறுதியளித்திருக்கிறது
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று நீர்வளத்துறை தொடர்பான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற உள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் இன்று காலை 10 மணிக்கு பட்ஜெட் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற உள்ளது.
“தாயின் கனிவையும், ஆசிரியரின் அக்கறையையும், ஒரு வழிகாட்டியின் கூர்மையையும், ஒரு சீர்திருத்தவாதியின் மானுடப் பற்றையும் கொண்ட நிதிநிலை அறிக்கை” என்று பட்ஜெட் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருந்தார்.
தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்டில் இடம்பெற்ற சில முக்கிய அறிவிப்புகள்:
*வேளாண்மை பட்டப்படிப்பு முடித்த இளைஞர்களுக்கு தொழில் தொடங்க தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும்.
* விவசாயிகளுக்கு விலையில்லா தென்னங்கன்றுகள் வழங்க ரூ.300 கோடி ஒதுக்கீடு
* இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க ரூ.400 கோடி ஒதுக்கீடு. மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்திற்கு ரூ.71 கோடி நிதி ஒதுக்கீடு
* சூரியகாந்தி உற்பத்தியை அதிகரிக்க ரூ.28.50 கோடி ஒதுக்கீடு
* பயிறு வகை விதைகளை மானியத்தில் வழங்க ரூ.3 கோடி ஒதுக்கீடு
* ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட வேளாண் சார்ந்த தொழில்களை ஊக்கப்படுத்த ரூ.65 கோடி ஒதுக்கீடு
* விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க டான்ஜெட்கோவுக்கு ரூ.5,157 கோடி நிதி ஒதுக்கீடு
* சர்க்கரை ஆலைகளை நவீனப்படுத்த ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு
* கரும்பு டன் ஒன்றுக்கு 195 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும்
* வேளாண் துறையிலும், மின்னணு வேளாண் திட்டம் ஏற்படுத்தப்படும்
* ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சிறு, குறு விவசாயிகளுக்கு கூடுதலாக 20 சதவித மானியம் வழங்கப்படும்
* இயற்கை வேளாண்மை, விளை பொருள் ஏற்றுமதி ஆகியவற்றில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு பரிசு வழங்கப்படும்
* விவசாயிகள் இடுபொருட்களை பெரும்போது பணமில்லா பரிவர்த்தனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழ்நாடு பட்ஜெட்டில் சில முக்கிய அறிவிப்புகள்:
*வானிலை மேம்பாடு பணிகளுக்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு
* சென்னை அருகே தாவரவியல் பூங்காவுக்கு ரூ.300 கோடி ஒதுக்கீடு
* இல்லம் தேடி கல்வித் திட்டத்திற்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு
* முன்மாதிரி பள்ளிகள் தொடங்க ரூ.125 கோடி ஒதுக்கீடு
* புதிய நூலகங்கள் அமைக்க ரூ.125 கோடி ஒதுக்கீடு
தமிழ்நாடு பட்ஜெட்டில் அணைகள் புனரமைப்பு பணிகளுக்கு ரூ.1,064 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ் வளர்ச்சித் துறைக்கு தமிழ்நாட்டில் பட்ஜெட்டில் ரூ.82.86 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பெரியாரின் எழுத்துகளை எட்டுத்திக்கும் எடுத்து செல்ல பெரியாரின் சிந்தனை அடங்கிய தொகுப்பு 21 இந்திய, உலக மொழிகளில் அச்சு மற்றும் டிஜிட்டல் வழியில் வெளியிட ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.
சட்டப்பேரவையில் கடந்த 19ஆம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
தமிழ்நாட்டின் நிதிநிலை அறிக்கையை கடந்த மார்ச் மாதம் 18ஆம் தேதி நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன் தாக்கல் செய்தார்.
Background
TN Assembly Session 2022 LIVE Updates:
தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த 18-ஆம் தேதி நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதன்பின்னர் பட்ஜெட் மீதான பொது விவாதம் நடைபெற்றது. இந்நிலையில் பட்ஜெட் தொடர்பான மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் இன்று முதல் நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்திருந்தார்.
பட்ஜெட் கூட்ட தொடரின் இரண்டாவது அமர்வு வரும் 6ஆம் தேதி தொடங்கி மே மாதம் 10ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஏப்ரல் 6ஆம் தேதி முதல் மானிய கோரிக்கை மீதான விவாதம் தொடங்க உள்ளது. அதன்படி தமிழ்நாடு சட்டப்பேரவையின் நிகழ்ச்சி நிரல்:
6-4-2022: நீர்வளத்துறை
7-4-2022: 34 - நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை
42 - ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
8-4-2022: 12- கூட்டுறவு
13-உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு
9-4-20322 (சனிக்கிழமை): அரசு விடுமுறை
10-4-2022(ஞாயிற்றுக்கிழலை): அரசு விடுமுறை
- - - - - - - - - Advertisement - - - - - - - - -