மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ, சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா ஆகியோர் ஆட்சியர் அனீஷ் சேகரை நேரில் சந்தித்து புகார் மனு அளித்தனர். அப்போதுசெய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், மதுரையில் உள்ள 16ஆவது மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு நடைபெறும் இடைத்தேர்தலுக்கு அமைக்கப்பட்டுள்ள 97 வாக்கு சாவடிகளில் 10 இடங்களில் மட்டுமே கண்காணிப்பு கேமரா வைக்கப்பட்டுள்ளது. அனைத்து வாக்கு சாவடிக்கும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும், மக்கள் அச்சுறுத்தல் இல்லாமல் வாக்களிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக உயர்நீதிமன்றம் அளித்துள்ள உத்தரவை முறையாக பின்பற்ற வேண்டும்.



 

உலகறிந்த திருமங்கலம் பார்முலாவை மீண்டும் செயல்படுத்தி தி.மு.க வெற்றி பெற முயற்சிப்பதாக தகவல் வந்துள்ளது. அ.தி.மு.க வெற்றியை தடுக்க அரசு இயந்திரங்களை தி.மு.க தவறாக பயன்படுத்துகிறது. தி.மு.கவினர் செய்யும் பணப்பட்டுவாடா குறித்தும் ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளோம். ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெற வேண்டும். ஆளும்கட்சி அதிகார துஷ்பிரயோகம் தொடர்ந்தால் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்போம். வெற்றி வாய்ப்பு பிரகாசம் என தி.மு.க ஆதரவு  வார பத்திரிக்கைகளே எங்களுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசம் என எழுதியுள்ளனர். எப்போதுமே ஊரகப்பகுதியில் அ.தி.மு.க.வுக்கு மக்கள் ஆதரவு அதிகம். மாதந்தோறும் மகளிர்க்கு 1000 ரூபாய் வழங்ப்படாததால் அது நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும். பெட்ரோல், டீசல் கேஸ்  விலை உயர்வு தி.மு.கவுக்கு எதிராக தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.



மதுரையின் முக்கிய செய்திகள் குறித்து தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும் - தமிழ்நாட்டின் தென் மண்டலத்தில் கவனிக்கவேண்டிய முக்கியச் செய்திகள் சில !

 

அ.தி.மு.கவின் தாலிக்கு தங்கம் திட்டம், முதியோர் உதவித்தொகை, பெண்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம் நிறுத்தப்பட்டு விட்டது. மக்கள் மீது அக்கறை இல்லாத அரசாக தி.மு.க உள்ளது. ஊரக உள்ளாட்சித்தேர்தலில் ஆளுங்கட்சியின் அராஜக அத்துமீறல் நடைபெறுகிறது. தி.மு.கவினர் வாக்காளர்களுக்கு பணவிநியோகம் செய்கின்றனர். சட்டமன்ற தேர்தலில் கவனக்குறைவால் தான் 5 இடங்களில் வெற்றி வாய்ப்பை இழந்தோம். மக்கள் 100 சதவீதம் எங்களுக்கு வெற்றி வாய்ப்பை வழங்கினார்கள். ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி எங்களுக்கு சாதமாக உள்ளது. வெற்றியை தடுக்க அனைத்து அரசு இயந்திரங்களை தவறான முறையில் தி.மு.க பயன்படுத்துகின்றனர்.