1. தேனி மாவட்டம், பெரியகுளம் தாலுகா, வடவீர நாயக்கன்பட்டி நில மோசடியில் மீட்கப்பட்டு 94.65 ஏக்கர் நில மோசடியில் ஈடுபட்ட 6 அலுவலர்கள் உட்பட, மோசடி பட்டாகளை வாங்கிய 69 பேர் மீது நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
2. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கடைகளை காலி செய்வதற்கு எதிரான வழக்கில் 15 நாட்களுக்கு அறநிலையத்துறை எவ்வித மேல்நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
3. திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லுாரியில் மாணவர் ராகிங் காரணமாக தாக்கப்பட்டதால் 10 நாட்களுக்கு விடுமுறை
4. 19 மாதங்களுக்குப் பிறகு இன்று முதல் மதுரை ராமேஸ்வரம் இடையே முன்பதிவு இல்லாத ரயில் சேவை துவக்கம் - மதுரை கோட்டம் தகவல்.
5. ராமநாதபுரம் அருகே வாணி காரி கூட்டத்தை சேர்ந்தவர் சாதிக் பாட்ஷா (53). இவர் 2010 ஜூன் 17 ல் திருச்சி பாஸ்போர்ட் அலுவலகத்தில் காரிக்கூட்டம் நுார்முகமது மகன் சாதிக்பாட்ஷா என்ற பெயரில் பாஸ்போர்ட் பெற்றார். 2018 செப்.20ல் மதுரை பாஸ்போர்ட் அலுவலகத்தில் காரிக்கூட்டம் அலாவுதீன் மகன் முகம்மது துக்ளக் என்ற பெயரில் மற்றொரு பாஸ்போர்ட் பெற்றுள்ளார். இதுகுறித்து மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் ராமநாதபுரம் எஸ்.பி.,கார்த்திக்கிடம் புகார் அளித்தார். கேணிக்கரை போலீசார் இவர்மீது வழக்கு பதிந்தனர்.
6. ஆட்டோ ஓட்டுனர் சாவை கொலை வழக்காக மாற்றக்கோரி உறவினர்கள் சாலை மறியல். நயினார் கோயில் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனரின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி உறவினர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தியதால் ராமநாதபுரத்தில் போக்குவரத்து பாதிப்பு
7. சொத்தை அபகரிப்பதற்காக மதுரை கோ.புதூரை சேர்ந்த 80 வயதான பாப்பம்மாள் என்ற மூதாட்டியை கொலை செய்த மகள் நாகேஸ்வரி மருமகன் முனியாண்டிக்கு ஆயுள் தண்டனை அளித்து மதுரை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு.
8. சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அடுத்த உடைகுளம் பகுதியில் உள்ள ரேஷன் கடை தெருவில் கஸ்தூரி-ராமகிருஷ்ணன் தம்பதி இருந்து வருகின்றனர். ராமகிருஷ்ணன் சென்னையில் கூலி வேலை செய்து வரும் நிலையில் கஸ்தூரி இட்லி மாவு விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் மானாமதுரை பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் அவர்களது வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதில் வீட்டில் உள்ள நபர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. அவர்கள் வளர்ந்த மாட்டிற்கு காயம் ஏற்பட்டது. ஆடு ஒன்று உயிரிழந்து. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மாவட்ட நிர்வாகம் உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
9. திண்டுக்கல் சந்துக்கடை பகுதியைச் சோந்தவா் மு. மீரான்பாபு (35). திமுக வடக்கு பகுதி இளைஞரணி துணை அமைப்பாளராக உள்ளாா். தட்டாம்பிள்ளை சந்து பகுதியைச் சோந்தவா் விஜயராஜ் (45) திமுக பிரமுகா். அதே பகுதியைச் சோந்த அதிமுக பிரமுகரான மோகன்ராஜ் (38) என்பவருக்கும், மீரான்பாபு தரப்பினருக்கும் இடையே அரசியல் ரீதியாக மோதல் இருந்து வந்துள்ளது. இந்நிலையில், திண்டுக்கல் தெற்கு ரத வீதியில் சென்று கொண்டிருந்த மீரான்பாபு மற்றும் விஜயராஜ் ஆகிய இருவரையும், மோகன்ராஜ் உள்ளிட்ட 4 பேர் கடந்த மாதம் 15 ஆம் தேதி கொலை செய்யும் முயற்சியில் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடினர். இது தொடர்பாக 4 பேரையும் மாவட்ட எஸ்பி.சீனிவாசன் பரிந்துரையின் பேரில் மாவட்ட கலெக்டர் விசாகன் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டதை தொடர்ந்து நகர் வடக்கு காவல்துறையினர் மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
10. விருதுநகர் மாவட்டத்தில் நேற்று மட்டும் 10 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 46142-ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 15 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 45450-ஆக அதிகரித்துள்ளது. நேற்று உயிரிழப்பு இல்லை என்பது ஆறுதல். இதனால் விருதுநகர் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 547-ஆக இருக்கிறது. இந்நிலையில் 145 நபர்கள் கொரோனா பாதிப்பால் விருதுநகரில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.