தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மாநில தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில் அக்டோபர் 9-ஆம் தேதி 2-ஆம் கட்டமாக நடக்க உள்ள உள்ளாட்சித் தேர்தைல் வாக்களிப்பதற்காக காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரு, குன்றத்தூர், செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் ஆகிய ஒன்றியங்களில் வாக்காளர் துணை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து வாக்காளர்களும் தற்காலிகமாக கட்டிடப் பணியாற்ற வந்திருக்கும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவருகிறது. இந்த வாக்காளர்கள் அனைவரும் போலியானவர்கள் என்பது தெரிந்துவிடும் என்பதால் துணை வாக்காளர் பட்டியலில் புகைப்படம் இணைக்காமல் வெளியிடப்பட்டுள்ளது.
முதல்கட்ட தேர்தல் அக்டோபர் 6-ஆம் தேதி முடிவடைந்த நிலையில், வெளியிடப்பட்டுள்ள துணை வாக்காளர் பட்டியல் 2-ஆம் கட்ட தேர்தலுக்கு ஏற்புடையதல்ல. எனவே இத்தகைய போலி வாக்காளர்களுக்கு வாக்களிக்க உரிமை இல்லை. அவர்களை வாக்களிக்க அனுமதிக்கக்கூடாது எனவே பஞ்சாயத்துத் தேர்தல் விதிகளுக்கு எதிராக எந்தவித ஆதாரமும் இல்லாமல் புகைப்படமும் இல்லாமல் வெளியிடப்பட்டுள்ள துணைப் பட்டியலில் உள்ளடக்கிய போலி வாக்காளர்கள் அனைவரையும் 9-ஆம் தேதி நடக்கும் 2-ஆம் கட்ட உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்க தடைவிதிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இப்படி வடமாநிலத்தவர்கள் வாக்காளர் பட்டியலில் இணைக்கப்படுபவர்கள் குறித்து தி.மு.க ஏற்கனவே பல முறை குற்றம்ச்சாட்டியிருக்கிறது. கடந்த 2019-ஆம் ஆண்டில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் போது முரசொலி ஒரு தலையங்கம் எழுதியிருந்தது. அதில், தமிழ்நாட்டில் கடந்த 5,6 ஆண்டுகளில் இந்தி, குஜராத்தி மொழிகளைப் பேசுவோரின் எண்ணிக்கை அதிகமாகி இருக்கிறது 3 லட்சத்து 93 ஆயிரம் பேர் இந்தி பேசுவோர் என்றும் குஜராத்தி மொழிப் பேசுவோர் 2 லட்சத்து 75 ஆயிரம் பேர் என்றும் புள்ளி விவர்ம் சொல்கின்றது. இவையெல்லாம் எதனைக் காட்டுகிறது என்றால் தமிழ்நாட்டில் வெளி மாநிலத்தவர்கள் அதிகமாகிக்கொண்டே போகிறார்கள்.
சென்னை மாநகர சாலைகளில் நடந்து செல்கிறபோது பிறமொழி உரையாடல்கள் தான் நம் செவிகளில் மிக அதிகமாக விழுகின்றன. இவர்கள் எல்லாம் வாக்காளர்கள் ஆகி வருகிறார்கள். வெளிமாநிலத்தவர்கள் இங்கே வாக்காளர்களாக இருப்பது இந்திய குடிமகனின் உரிமையாக இருக்கலாம். ஆனால் அது அதிகரிப்பதில் ஆபத்து இருக்கிறது என்று திமுக குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் கேட்டோம். மாநில தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்திருக்கிறோம். இதுவரை எந்த ரெஸ்பான்சும் என்று கூறினார். அதோடு சென்னையில் மிகப்பெரிய அளவில் வடமாநிலத்தவர் எண்ணிக்கை கூடியிருக்கிறது என்று கூறிய அவர், வடமாநிலத்தவரை கணக்கிடுவதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும். இது தமிழ்நாட்டு மக்களின் நலனை பாதிக்கும் என்று கூறினார். அத்துடன், வெளிமாநிலத்தவர் வருவதை விட அவர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெறுவதுதான் பிரச்சனை என்று ஆர்.எஸ்.பாரதி கூறினார்.
இதை படிக்க மறக்க வேண்டாம் - 'என் தங்கத்த காணோமே’ : 60 நாய்களுக்கு சரணாலயம்.. வீட்டைச்சுற்றியே சமாதிகள்.. ஆச்சரியம் தரும் முதியவரின் கதை !